ரஜினியும் இல்ல, விஜயும் இல்ல, தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தானாம் – ரோபோசங்கர் பளிச் பேட்டி

0
3261
Roboshankar
- Advertisement -

சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரை இறங்கியதால் இந்தியா முழுவதுமே சந்தோஷத்தில் கொண்டாடி இருக்கிறது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் நிலவிற்கு ஏவப்பட்டது. இது சுமார் 40 நாள் பயணம் என்றே சொல்லலாம். இது இந்தியா செய்திருக்கும் மிக பெரிய சாதனை என்று சொல்லலாம். இது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம். இந்த நிகழ்வை நாடே சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இதில் திட்ட இயக்குனராக இருந்து செயல்பட்டவர் விழுப்புரத்தை சேர்ந்த வீர முத்துவேல். இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள வீரமுத்து வேலுவின் வீட்டிற்கு பல தலைவர்கள் நேரில் சென்று அவருடைய தந்தை பழனிவேல் இடம் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் சில தினங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் வீர முத்துவேலின் வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்தி இருக்கிறார். பின் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியது, உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஒரு அற்புதமான விஞ்ஞானி வீரமுத்துவேல்.

- Advertisement -

சந்திராயன் 3:

ஒரு தமிழனாக அதுவும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முதன்மை விஞ்ஞானியாக இருக்கிறார். இஸ்ரோவில் சந்திராயன் 3 திட்டத்திற்கு இரவு பகலாக உழைத்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த ஒரு மாபெரும் விஞ்ஞானி. விழுப்புரம் மாவட்டத்தை இன்று உலகமே திரும்பிப் பார்க்கும்படி வைத்திருக்கிறார். அவருடைய இல்லத்தில் தான் நாங்கள் இருக்கிறோம். வீரமுத்துவேல் அவர்கள் விழுப்புரத்தில் இல்லை. பெங்களூரில் இருக்கிறார்.

வீரமுத்துவேல் குறித்து சொன்னது:

அதனால் அவரின் தந்தையாரை நாங்கள் குடும்பத்தோடு வந்து சந்தித்து ஆசீர்வாதம் வாங்கி செல்கிறோம்.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை தற்போது தலைவிரித்து கொண்டிருக்கின்றது. அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று என்னை கேட்டால் நான் தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்வேன். என்னை விடுங்கள், தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் என யார் கேட்டாலும் வீரமுத்துவேல் அவர்களை தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

அடுத்த சூப்பர் ஸ்டார்:

இதைவிட ஒரு பெருமை என்ன இருக்கிறது? அப்துல் கலாம் ஐயா அவர்கள் வாழ்ந்த நாட்களில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பது மிகப்பெரிய பெருமை. அவரை பார்க்கக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை. அவருடைய நகலாக முத்துவேல் மற்றும் அவருடைய தந்தை பழனிவேலை நாம் பார்க்கின்றோம். ரியல் சூப்பர் ஸ்டார் இவர்கள்தான். வருங்கால பள்ளி மாணவர்களை பார்த்து நீ என்னவாக போகிறாய் என்று கேட்கும்போது வீர முத்துவேல் அய்யா போல இந்தியாவிற்கு பெருமை சேர்ப்போம். என்று அவர்கள் சொல்ல வேண்டும் என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

ரோபோ சங்கர் குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

Advertisement