டக் மேன் என்ற விமர்சித்த ரசிகர்கள். அதற்க்கு பதிலடி தந்து ஹிட் மேன் என்று நிரூபித்த ரோஹித் ஷர்மா.

0
967
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவை டக் மேன் என விமர்சித்த ரசிகர்கள். அதற்க்கு இன்று பதிலடி கொடுத்த ரோஹித் ஷர்மா. உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 5 ஆம் தேதி முன்பு தொடங்கியது. அதில் ஐந்தாவது போட்டியில் இந்தியா அணி மற்றும் ஆஸ்திரேலியா அணியின் மோதினர். அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

-விளம்பரம்-

இருப்பினும் அந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஆறு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேறினர். அதை இந்திய அணியின் ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்து வந்தனர். அதன் பின் இன்று இந்திய அணி ஆப்கானிஸ்தான அணியை எதிர்கண்டது அதில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யது பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

அதன்படி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். இப்ராஹிம் சத்ரான் 22 ரன்களில் பும்ராவிடம் அவுட் ஆகி வெளியேற அதன் பின் குர்பாஸ் 21 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இந்நிலையில் நிதானமாக விளையாட நினைத்த ரஹ்மத் 16 ரன்களிலே தாக்கூர் வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேற அதன் பின் அஸ்மத்துல்லாஹ் நிதானமாக வெளியே அடி 66 ரன்களை குவித்தார்.

அவருடன் இணைந்து விளையாடி ஷாஹிதி 80 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் பந்து வீச்சை சமளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான அணி அடுத்தடுத்து வெக்கெட்டுகளை இழந்து 50 ஓவர் முடிவில் 272 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது. 273 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் கிஷன் ஆரம்பம் முதல் அதிரடி காட்டி ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீசை நான்கு பக்கமும் சிதறடித்து வந்தனர்.

-விளம்பரம்-

ரோகித் சர்மா 63 பந்துகளில் தன்னுடைய சதத்தை நிறைவு செய்தார். மேலும் இருவரும் இணைந்து விக்கெட் இழப்பின்றி 150 ரன்களை குவித்தனர். மற்றொரு பக்கம் விளையாடி கொண்டு இருந்த இஷாந்த் கிஷன் 46 பந்துகளில் 47 ரன்களை அடித்த நிலையில் ராஷித் கான் வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த விராட் கோலி ரோஹித் சர்மாவுடன் இணைத்து பந்து வீச்சை சிதறடித்து தற்போது விளையாடி வந்தனர். ரோஹித் ஷர்மா 131 ரன்களில் ராஷித் கானிடம் விக்கெட்டை இழந்தார்.

Advertisement