நடிகர் பவன் கல்யானை விமர்சித்து நடிகை ரோஜா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. அதிலும் அனைத்து கட்சிகளும் தேர்தலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆந்திர மாநில சுற்றுலா துறை மந்திரியாக ரோஜா இருக்கிறார். இவர் விசாகப்பட்டினத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், ஜனசேனா கட்சித் லைவர் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் வருகிற தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை என்பதை உணர்ந்து விரக்த்தியில் இருக்கிறார். சத்தம் போட்டு கத்தி கூச்சல் போடுவதால் மட்டும் ஓட்டு கிடைக்காது. இதை அரசியல்வாதியாக மாறி இருக்கிற நடிகர் புரிந்து கொள்ள வேண்டும்.
ரோஜா பேட்டி:
மேலும், பவன் கல்யாணின் விரக்தி அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் கூச்சல் போடும் அளவிற்கு சென்று விட்டது. அவருடைய தோல்விக்கு தொண்டர்களை குறை சொல்வது வெட்கக்கேடானது. அதோடு கடந்த 10 ஆண்டுகளாக அவர் என்ன செய்து கொண்டு இருந்தார்? என்று தெரியவில்லை. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுக்காக பவன் கல்யாண வேலை செய்து வருகிறார்.
பவன் கல்யாண் குறித்து சொன்னது:
மேலும், முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தங்களுடைய கட்சிகளை உருவாக்கினார்கள். ஜெகன்மோகன் ரெட்டி மக்களின் அன்பையும் புகழையும் பெற்று முதல் மந்திரியாக ஆகியிருக்கிறார். ஆனால், பவன் கல்யாண் இரண்டு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியை மீண்டும் முதல் மந்திரி ஆக தேர்வு செய்ய மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று ஆவேசமாக பேசி இருக்கிறார்.
ரோஜா குறித்த தகவல்:
தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு குச்சி பிடி நடன கலைஞராக இருந்தார். பின் இவர் தெலுங்கு மொழி படத்தின் மூலம் நடிகையானார். அதற்கு பின் தான் இவர் தமிழில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், பிரபு, சரத்குமார் என்று பல நடிகர்களின் படங்களிலும் நடித்து இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணசித்திர வேடங்களில் நடித்து இருந்தார்.
ரோஜா அரசியல்:
பின் சில ஆண்டு காலாகவே ரோஜா அவர்கள் சினிமாவை விட்டு விலகி அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்தார். ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதில் ரோஜாவுக்கு பங்கு உண்டு. ரோஜா அந்த பகுதி மக்களின் கல்வி,மருத்துவ உதவி என பல விஷயங்களை செய்து அசத்தி இருக்கிறார். தற்போது ரோஜா அவர்கள் ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றி வருகிறார்.