எப்படி பேசி இருக்கார் பாருங்க – தர குறைவாக பேசிய முன்னால் அமைச்சர். கண்ணீர் மல்க பேசிய ரோஜா.

0
727
- Advertisement -

தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் தன்னை இழிவாக பேசியிருப்பதை கேட்டு கண்ணீர் மல்க ரோஜா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி அவர்கள் சமீபத்தில் அமைச்சர் ரோஜாவை குறித்து மிக மோசமாக பேசியிருந்தார். இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இந்த நிலையில் நடிகை ரோஜா அவர்கள் இது தொடர்பாக தன்னுடைய வீட்டில் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், நான் படத்தில் நிர்வாணமாக நடித்ததாக கூறி என்னை சித்திரவதை செய்கின்றனர். சட்டசபையிலும் சீடிக்கள் எல்லாம் காட்டப்பட்டது. ஆனால், அந்த சீடியில் இருப்பது நான் தான் என்று நிரூபிக்கப்படவில்லை. பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது.

- Advertisement -

ரோஜா அளித்த பேட்டி:

என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டு பொருளாக நடத்துகிறது. உங்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி இப்படி பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா? முன்னாள் அமைச்சர்கள் காந்தா ஸ்ரீனிவாஸ், அய்யண்ணபத்ரா, சந்திரபாபு நாயுடு, லோகேஷ் ஆகியோர் இது தொடர்பாக கண்டிக்காதது ஏன்? தெலுங்கு தேசம் கட்சி ஒரு திரையுலக பிரமுகரால் நிறுவப்பட்ட கட்சி. பண்டாரு சத்தியநாராயணனின் பேச்சை கேட்டு அவருடைய மனைவியே அறைந்திருக்க வேண்டும்.

தெலுங்கு தேசம் கட்சி குறித்து சொன்னது:

லோகேஷ் வெட்கமின்றி அதற்கு டீவ்ட் செய்கிறார். சந்திரபாபு நாயுடு என்னை பிரச்சாரத்திற்கு அழைத்தது ஏன்? நான் கெட்டவள் என்றால் என்னை ஏன் கட்சியில் சேர்த்தார்? என்னை அயர்ன் லெக் என்று கேலி செய்தார்கள். நான் உங்கள் கட்சியில் இருக்கும்போது நல்லவராகவும் வேறு கட்சியிலிருக்கும் போது கெட்டவராகவும் எப்படி இருக்க முடியும். பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி என்னைப் பற்றி தவறாக பேசியது என்னை ரொம்ப புண்படுத்திருக்கிறது.

-விளம்பரம்-

கைதான பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி:

தப்பை கேள்வி கேட்டால் என்னை தாக்கி பேசுவார்களா? தெலுங்கு தேசம் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை. தெலுங்கு தேசம் கட்சியால் அரசியல் ரீதியாக வளர முடியாது. பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என்று கூறி இருந்தார். இப்படி அமைச்சர் ரோஜா பேசியிருந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் அவதூறாக பேசிய வழக்கில் பண்டாரு சத்தியநாராயண மூர்த்தியை கைது செய்திருக்கின்றனர்.

ரோஜா திரைப்பயணம்:

தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு என்று பல நடிகர்களின் படங்களிலும் நடித்து இருந்தார். அதே போல இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து இருந்தார். பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வருகிறார் ரோஜா. தற்போது இவர் ஆந்திராவில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார்.

Advertisement