கடுமையாக நடந்து கொண்ட பாதுகாவலர்.! அறைந்த சல்மான் கான்.! வைரலாகும் வீடியோ.!

0
654
Salman-Khan
- Advertisement -

இந்தி நடிகரான சல்மான் கான் பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகராக திகழ்ந்து வருகிறார். இருப்பினும் இவருக்கு இருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த நிலையில் சல்மான் பாதுகாவலரை பொது இடத்திலேயே சல்மான் கான் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

-விளம்பரம்-

சல்மான் கான், கேத்ரினா கைப், தபு உட்பட பலர் நடித்துள்ள படம் ’பாரத்’ திரைப்படம் நேற்று வெளியானது. அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ள இந்தப் படம் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுளளது, இந்த படத்தை காண மும்பை தியேட்டர் ஒன்றுக்கு நேற்றுமாலை சல்மான் கான் வந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், வெளியே வந்தார்.

இதையும் படியுங்க : நடிகருடன் மைனாவிற்கு இரண்டாவது திருமணம்.! மாப்பிளை இவர் தான்.! 

- Advertisement -

சல்மான் கானை பார்க்க திரையரங்கிற்கு வெளியில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது சில சிறுவர்கள் மற்றும் பெண்கள் அவர் அருகே வர முயன்றனர். சிலர் அவரிடம் ஏதோ கேட்டனர். அவர்களுக்கு சல்மான் பதில் சொன்னார். அப்போது, பாதுகாவலர் ஒருவர், ரசிகர்களை பிடித்துத் தள்ளினார். இதனால் ஆவேசமடைந்த சல்மான் கான், அந்த பாதுகாவலர் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதை எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சி அடைந்தார்.

Advertisement