நிச்சம் முடிந்த பின்பே டிமிக்கி கொடுத்த கணவர், ஒரே ஆண்டில் கணவரை பிரிந்தாரா ரோஜா சீரியல் பிரியங்கா

0
498
Priyanka
- Advertisement -

சன் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ரோஜா சீரியலில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிய இந்து சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது இதனை தொடர்ந்து பிரியங்கா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரில் நாயகியாக நடித்தவந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “எல்லாத்துக்கும் சாரி, எப்படா வருவ? நான் உனக்காக காத்துட்டு இருக்கேன்டா”, என்று செம ஃபீலிங் காதலனை நினைத்துஒரு உருக்கமான பதிவை போட்டிருந்தார்.

-விளம்பரம்-

இதுகுறித்து இணையங்களில் பலவிதமான கருத்துகள் எழுந்தன. இந்த நிலையில் நடிகை பிரியங்காவிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நிச்சயதார்தம் கூட முடிந்தது.பிரியங்கா, தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலை கடந்த சில காலமாக காதலித்து வந்தார். மேலும், இவர்களின் திருமண நிட்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் இவர்கள் திருமணம் நின்றுபோனதாக தகவல்கள் வெளியானது .

- Advertisement -

இதுகுறித்து பேசி இருந்த பிரியங்கா, எங்களுக்கு கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது ஆனால், ஒரு சில காரணங்களால் கல்யாண தேதி தள்ளிக்கொண்டே போனது மேலும், எங்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடு தீர்க்க முடியாத அளவிற்கு பெரிதாகி விட்டது.ஹைதராபாத்திலிருந்து மலேசியா சென்ற ராகுல், என்னை இதுவரை தொடர்பு கொள்ளவே இல்லை. கடைசி முயற்சியாக மிகவும் கஷ்டப்பட்டு அவரை போனில் தொடர்பு கொண்டேன். ஆனால், எந்த பயனும் இல்லை. இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

இனிமேல் எங்களுக்குள் எதுவும் கிடையாது. நிச்சயதார்த்தம் கூட முடிஞ்சிருச்சு இனிமேல் அவரவர் வாழ்க்கையை பார்த்து செல்ல வேண்டியதுதான். ஆல் தி பெஸ்ட் ராகுல்’ என்று கூறி இருந்தார் பிரியங்கா. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி போன்றவை பேசிய பிரியங்கா தெலுங்கு சினிமாவிலும், சில டிவி தொடர்களிலும் முன்பு நடித்திருந்தார் ராகுல். அவரை பிரியங்கா காதலித்து வந்தார்.

-விளம்பரம்-

இருவரும் ஒரே துறையில் பிஸியாக இருந்ததால் ராகுல் இந்தத் துறை வேண்டாம் என முடிவெடுத்துவிட்டு மலேசியாவில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டார். இப்படி ஒரு நிலையில் சில மாதங்களுக்கு முன் தான் ப்ரியங்காவிற்கும் ராகுலுக்கும் விநாயகர் கோவிலில் படு சிம்பிளாக திருமணம் நடைபெற்றது. தனது கணவருடன் பகிர்ந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிய நீக்கி இருக்கிறார். மேலும், சமீப நாட்களாக சோகமான பதிவுகளை போட்டு வருகிறார்.

இதனால் பிரியங்கா தனது கணவரை பிரிந்துவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளம் வாயிலாக நெட்டிசன்களுடன் கலந்துரையாடிய பிரியங்காவிடம் ஒருவர் நீங்கள் சிங்கிளா என கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் ஆமாம் என பதில் அளித்துள்ளார். இதனால் பிரியங்கா தனது கணவரை பிரிந்தது உண்மை தானோ என்று அவரது ரசிகர்கள் கமண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement