கோவிலில் கைகொடுக்க மறுத்த அர்ச்சகர் – பெரியார் வரிகளை போட்டு பகுத்தறிவு படம் எடுத்த ப்ளூ சட்டை.

0
469
Yogibabu
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

ஆனால், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து தான் வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். மேலும், தன்னைத்தானே விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். படத்தில் இருக்கும் நிறைகளை பேசுவதைவிட குறைகளை பேசுவது தான் அதிகம். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன.

- Advertisement -

ஆனால், உண்மையில் ஒரு சில சமயத்தில் நல்ல படங்களுக்கு நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார். படங்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் நடிகர் நடிகைகள் குறித்தும் அடிக்கடி எதாவது பதிவிட்டு வருவார். அதிலும் சினிமா பிரபலங்கள் யாரேனும் சர்ச்சையில் சிக்கிவிட்டால் அவர்களை வச்சி செய்துவிடுவார். அந்த வகையில் சமீபத்தில் யோகி பாபுவிற்கு கோவிலில் நடைபெற்ற தீண்டாமை விஷயத்திற்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

யோகி பாபு முகுந்த தெய்வ பக்தி கொண்ட ஒரு நபர். இதனால் அடிக்கடி கோவில் குளம் என்று சென்று வருவதை வாடிக்கையாக வைத்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ஒரு கோவிலுக்கு சென்று இருந்தார். யோகி பாபுவை அங்கு கண்ட பக்தர்கள் சிலர் அவருடன் செல்ஃபீ எடுத்தனர். அதன் பின் யோகி பாபு பூசாரியிடம் சென்று பேச கை கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால், அவர் யோகி பாபுவிற்கு கைகொடுக்கவில்லை.

-விளம்பரம்-

கடைசி வரை அவர் யோகி பாபுவிற்கு கைகொடுக்காமல் தான் பேசி இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோவை தான் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பகிர்ந்து இப்ப எல்லாம் யார் ஜாதி பார்க்கிறார்கள் கேட்பவர்களுக்கு என்று கேப்சன் போட்டு வைரல் ஆக்கி வருகிறார்கள். இதை பார்த்த பலருமே கண்டனத்தை தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள்.மேலும், யோகி பாபுவிற்கே இப்படி தீண்டாமை கொடுமையா என்று விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், யோகி பாபு இதுகுறித்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் யோகிபாபுவின் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன் ‘சாமி கும்பிடுறேன்’ என்பதற்கு எதிரானது இல்லை பகுத்தறிவு. ‘கும்பிடுறேன் சாமி’ என்பதற்கு எதிரானதே பகுத்தறிவு’ என்று பெரியாரின் வரிகளை போட்டு யோகி பாபுவிற்கு பகுத்தறிவு படத்தை சொல்லிக்கொடுத்துள்ளார்.

Advertisement