சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான்.அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், TRP அளவை எகிற வைக்கிறது.அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜோ சீரியல், அந்த தொலைக்காட்சியின் வெற்றிகரமான சீரியலாக திகழ்ந்து வருகிறது. இந்த சீரியலில் நாயகனாக சிபு சூரியன் என்பவரும் நாயகியாக பிரியங்கா நல்காரியும் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ள இந்த சீரியல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த 800 எபிசோடுகளை கடந்து பிரம்மாண்ட மைல் கல்லை எட்டியது.
இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா நல்காரி. தெலுங்கு திரையுலகில் 2010-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘அந்தாரி பந்துவையா’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சந்திரா சித்தார்த்தா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஷர்வானந்த் நடித்திருந்தார்.அவருக்கு ஜோடியாக பத்ம ப்ரியா நடித்திருந்தார். இப்படத்தில் மிக முக்கிய ரோலில் நடிகை பிரியங்கா நல்காரி நடித்திருந்தார். இது தான் நடிகை பிரியங்கா நல்காரி அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம்.
இதையும் பாருங்க : இந்த சீன உங்க குழந்தைக்கு எப்படி சொல்லி கொடுத்தீங்க – ரித்துவின் இந்த வீடியோவால் எழுந்த சர்ச்சை.
இதனைத் தொடர்ந்து தெலுங்கில் திலீப்பின் ‘நா சாமி ரங்கா’, ராமின் ‘ ஹைப்பர்’, ராணா டகுபதியின் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார் நடிகை பிரியங்கா நல்காரி. அதன் பிறகு ஈ டிவியில் ஒளிபரப்பான ‘மேகமாலா’ மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்தார் நடிகை பிரியங்கா நல்காரி.
தெலுங்கு திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை பிரியங்கா நல்காரி, தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘காஞ்சனா 3’. பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தினை இயக்கி, நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார் பிரியங்கா.