‘சில நேரங்களில் அது மிக அவசியமான ஒன்றாகிறது’ – ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சிப்பு.

0
656
- Advertisement -

ரோஜா சீரியல் இருந்து அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிபு சூரியன் திடீரென விலகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் இருந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சின்னத்திரை தொடர்கள் இருக்கிறது. கொரோனா லாக் டவுனில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சீரியலை விரும்பி பார்த்து வருகிறார்கள். அதில் எப்போதும் சன் டிவி முதலிடத்தை பிடித்து விடும் என்பதில் அய்யமில்லை.

-விளம்பரம்-

டிஆர்பி ரேட்டிங்கிலும் சன் டிவி முதல் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் சில வருடமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடைப்போடும் தொடர்களில் ‘ரோஜா’ சீரியலும் ஒன்று. இந்த சீரியல் டிஆர்பியிலும், மக்கள் மனதிலும் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இந்த சீரியல் தான் டாப் இடத்தை பிடித்து இருக்கிறது. இதனால் ரோஜா சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இதையும் பாருங்க : என் முதல் ஹீரோவுடன் 32 ஆண்டுகள் கழித்து நடிக்கின்றேன் – மீனா பதிவிட்ட புகைப்படம். (ரஜினினு நினைப்பீங்க அதான் இல்ல)

- Advertisement -

ரோஜா சீரியல்:

மேலும், 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. ரோஜா சீரியலில் ஹீரோவாக சிபு சூர்யனும், ஹீரோயினாக பிரியங்கா நல்காரியும் நடிக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த தொடரில் வில்லியாக ஷாமிலி நடித்து இருந்தார். பின் இவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகினார். இவருக்கு பதில் தற்போது வில்லி அனு என்ற கதாபாத்திரத்தில் அக்சயா நடித்து வருகிறார்.

சீரியலில் விலகிய நடிகர்கள்:

இவர் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த தொடரில் அஸ்வின் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெங்கட் விலகி இருந்தார். இவருக்கு பதில் வேறு ஒரு நடிகர் நடித்து வருகிறார். இப்படி பல முக்கிய கதாபாத்திரங்கள் இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நாட்கள் செல்ல செல்ல சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

சீரியலில் விலகிய சிபு சூர்யன்:

இந்தநிலையில் ரோஜா சீரியல் இருந்து சிபு சூர்யன் திடீரென விலகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிபு சூரியன் விலகுவதாக அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது. இதை அவரே இன்ஸ்டாகிராமில் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பது, நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன். வரும் ஆகஸ்ட் வரை மட்டுமே நான் நடிப்பேன். அதிகம் யோசித்து, புரோடக்சன் டீம் அனுமதியுடன் நான் இன்னொரு பயணத்தை தொடங்குகிறேன்.

சிபு சூர்யன் போட்ட பதிவு:

குட்-பை சொல்வது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால், சில நேரங்களில் அது மிக அவசியமான ஒன்றாகிறது. அர்ஜுன் கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல். என் மனதிற்கு நெருக்கமான தொடர்பு மற்றும் அன்பிற்கு நன்றி. புது பிராஜெக்ட் உடன் உங்களை என்டர்டைன் செய்கிறேன். உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஆசிர்வாதம் எனக்கு தேவை என்று பதிவிட்டிருக்கிறார். இவர் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இனி அர்ஜுனாக யார் நடிக்கப் போகிறார்? என்ற கேள்வியும் ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.

Advertisement