ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டைப்படத்தில் பாடலாசிரியர் அறிவு படம் இடம்பெறாததற்கு இயக்குநர் பா. ரஞ்சித் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், அட்டைப் படத்தில் இடம்பெற்ற பாடகர் ஷான் வின்செண்ட் பால் டி ரஞ்சித் குறித்து போட்ட பதிவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போதும் மிகவும் பிரபலமான ராப் பாடகராக திகழ்ந்து வருபவர் அறிவு.
தாழ்த்தப்பட்ட மக்களின் வலிகளை ரேப் இசை பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். அதிலும் இவர் எழுதிய ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் இந்திய அளவில் பிரபலமடைந்தது. மேலும், இந்த பாடல் இந்திய அளவில் எந்த அளவிற்கு ஹிட் அடைந்தது என்பது நாம் அனைவரும் அறிவோம்.
இப்படி ஒரு நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோனின் இந்திய பதிப்பின் அட்டை படத்தில் ‘எஞ்சாய் எஞ்சாமி’ மற்றும் ’நீயே ஒளி’ பாடல்களின் சர்வதேச சாதனைகளை பாராட்டும் வகையில் பாடகி தீ மற்றும் பாடகர் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றது.
ஆனால், இரண்டு பாடல்களின் பாடலாசிரியரும், ’எஞ்சாய் எஞ்சாமி’ பாடலின் பாடகர்களில் ஒருவருமான ’தெருக்குரல்’ அறிவின் படம், அதில் இடம் பெறவில்லை. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் தெருக்குரல்’அறிவு படம் ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டை படத்தில் இடம்பெறாததற்கான காரணம் புரியவில்லை, அறிவு மீண்டும் ஒருமுறை மறைக்கடிக்கப்பட்டிருக்கிறார்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.
ரஞ்சித்தின் இந்த பதிவு பெரும் வைரலானது. இப்படி ஒரு நிலையில் பாடகர் ஷான் வின்செண்ட் டீ பால் ரஞ்சித்தை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இது தவறான தகவல்கள், இந்த விஷயத்தை பற்றி ஒன்றும் தெரியாத பா.ரஞ்சித்தின் பொறுப்பற்ற முறையில் ட்வீட்டால் நான் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளானேன். என்னுடைய தற்போதைய நிலைக்கு இயக்குநர் பா.ரஞ்சித்தான் பொறுப்பு.
அவரை பின் தொடரும் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுக்கு பொறுப்பற்ற முறையில் கருத்திட்டுள்ளார். நான் ஏன் அட்டையில் இருக்கிறேன்? அறிவு ஏன் இல்லை என்பதில் எந்தப் போட்டியும் இல்லை.நான் ஐந்து வருடங்களாக உழைத்துக் கொண்டிருக்கும் ‘மேட் இன் யாழ்ப்பாணம்’ என்ற எனது ஆல்பத்தை மஜ்ஜாவுடன்தான் வெளியிடுகிறேன். அதற்காகத்தான் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ளேன் என்று கூறியுள்ளார்.