வெறி புடிச்ச நாய் மாதிரி,என் சாதிப் பெயர சொல்லி சொல்லி அடிச்சான் – கொடூர தாக்குதலுக்கு ஆளான சரிகமப போட்டியாளர்

0
170
- Advertisement -

ஜீ தமிழில் சரிகமப போட்டியாளர் மீது ஜாதி வரியால் நடந்திருக்கும் கொலைவெறி தாக்குதல் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பேமஸ் தான். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது.

-விளம்பரம்-

வழக்கம்போல் அர்ச்சனா தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. மேலும், சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்தது. தற்போது ஜூனியர் கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் சரிகமப நிகழ்ச்சி போட்டியாளரின் மீது நடந்திருக்கும் கொலைவெறி தாக்குதல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சரிகமப நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தவர் பாடகர் பிரகாஷ். இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆயிப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் விவசாயி குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு 26 வயதாகிறது. பிரகாஷ் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மாற்று சமூகத்தினர் பிரகாஷின் தந்தை மீது கல் எறிந்ததில் அவர் இருந்திருக்கிறார்.

அதன் பின்னர் இவருடைய கை, கால் செயல் இழந்து விட்டது. மேலும், இவர் தன்னுடைய கிராமத்தின் சுற்று பகுதியில் உள்ள ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகள் எல்லாம் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார். அதற்கு பிறகு தான் 2019 ஆம் ஆண்டு ஜீ தமிழில் சரிகமப சீசன் இரண்டில் போட்டியளராக பிரகாஷ் அறிமுகம் ஆகியிருந்தார். இவர் பாடலைக் கேட்டு யுவன் சங்கர் ராஜா மேடைக்கு வந்து இவரை கட்டி கட்டியணைத்து பாராட்டி இருந்தார்.

-விளம்பரம்-

அதற்குப் பிறகு பல பிரபலங்களிடம் இவர் பாராட்டு பெற்று மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் பிரகாஷுக்கு நடந்திருக்கும் கோர சம்பவம் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தீபாவளி பண்டிகை அன்று பிரகாஷ் தன்னுடைய உறவினரோடு பட்டாசு வாங்குவதற்காக சென்றிருக்கிறார். அந்த இடத்தில் சமயம் மற்றும் சமூகத்தினர் அவரை வழிமறித்து பீர் பாட்டிலால் தலையில் 15 முறை கொடூரமாக தாக்கி இருந்திருக்கிறார்கள்.

கற்களை வீசி இருக்கிறார்கள். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரகாஷ் விழுந்து கிடந்தார். தற்போது பிரகாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே கண்டித்து, இதற்கு அரசாங்கம் சரியான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பிரகாஷிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

Advertisement