தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வரும் கார்த்தி மீண்டும் அப்பாவாகி இருக்கிறார் தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியும் அடக்கம். தமிழ் சினிமாவின் 80 காலகட்டம் துவங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகுமார். இவரது மகன்களான சூர்யா, கார்த்தி இருவருமே இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்களாக திகழ்ந்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். கார்த்தியின் மூத்த மகனான சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். மேலும், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
அதே போல கார்த்தி நடிகர் கார்த்தி கடந்த 2011-ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் பார்த்து நிச்சயித்த இந்தத் திருமணம் கோயம்புத்தூரில் நடந்தது. ரஞ்சனி கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர். இத்தம்பதியருக்கு 2013-ம் ஆண்டு இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தனர். அவருடைய பெயர் உமையாள். இப்படி ஒரு நிலையில் கார்த்தியின் மனைவி இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருந்தார். அதனை நமது வலைதளத்தில் கூட தெரிவித்து இருந்தோம்.
கார்த்தி அவர்கள் முதன் முதலாக பிரபல இயக்குனர் மணிரத்தினத்திடம் தான் உதவி இயக்குனராக பணி புரிந்தார். பின் இவர் இயக்குனர் அமீரின் இயக்கத்தில் வெளிவந்த “பருத்திவீரன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.இவர் நடித்த முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. அதன் பின் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் நடித்தார். அதிலும் கார்த்திக்கு மிக பெரிய வெற்றி கிடைத்தது. இதனை தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், தோழா, காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும், சுல்தான் என்ற படத்திலும் நடித்துள்ளார் கார்த்தி. இப்படி ஒரு நிலையில் நடிகர் கார்த்தி மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கார்த்தி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நாங்கள் ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டு நிற்கிறோம் இந்த நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நன்றி கூறிக் கொள்கிறேன் எங்களின் மகனுக்கு உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும் கேட்டுக்கொள்கிறேன் கடவுளுக்கு நன்றி. என்று கூறியுள்ளார்.