விஜய் சேதுபதி குறித்து பிக் பாஸ் சாச்சனா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி 11வது வாரம் தொடங்கி 77 நாட்கள் முடிய இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் புது டாக்ஸ்கை கொடுத்திருந்தார். அதில் ராணவுக்கு தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டு இருந்தது.
அதற்குப்பின் ராணவை மருத்துவமனையில் அனுமதித்து இருந்ததாக பிக் பாஸ் அறிவித்து இருந்தார். இதனால் போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. பின் ராணவ் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னதாக பிக் பாஸ் கூறியிருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:
இதை அடுத்து கேப்டன்சி டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் முத்துக்குமரன், பவித்ராவுக்காக விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால், பிக் பாஸ் இதை கண்டித்தும் முத்து குமரன் செய்து இருந்தார். இதனால் பிக் பாஸ் கேப்டன்சி டாஸ்கை ரத்து செய்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இனிவரும் நாட்களில் நாமினேஷன் பிரீ பாஸ் கிடையாது என்று அறிவித்திருந்தார். இதனால் முத்துக்குமரன் மனமுடைந்து பிக் பாஸ் இடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். உடனே மற்ற போட்டியாளர்களுமே பிக் பாஸ் இடம் கெஞ்சி மன்னிப்பு கேட்டிருந்தார்கள். ஆனால், பிக் பாஸ் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.
சாச்சனா குறித்த தகவல்:
மேலும், இந்த நிகழ்ச்சியில் பரிச்சயமான நபர்களில் ஒருவராக சாச்சனா கலந்து கொண்டிருந்தார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த மகாராஜா படத்தில் அவருடைய மகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதன் மூலம் தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியில் நுழைந்த ஒரு நாளிலேயே இவர் வெளியேற்றப்பட்டிருந்தார். அதற்குப்பின் மீண்டும் பிக் பாஸில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இவர் நன்றாக விளையாடி வந்தாலும் சில நேரங்களில் இவர் செய்த அட்ராசிட்டி ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருந்தது. இதனாலேயே இவர் வெளியேறிவிட்டார்.
https://youtube.com/shorts/5ggH5zZY9GE?si=E16qDzvR8bUiStrW
சாச்சனா பேட்டி:
இந்நிலையில் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் சேதுபதி குறித்து அளித்த பேட்டியில் சாச்சனா, நான் பிக் பாஸ் வீட்டுக்குள் ஸ்கிரீனில் அவரை பார்க்கும்போது அப்பாவாக பார்க்கவில்லை. அவரை ஒரு தொகுப்பாளராக தான் பார்த்தார். அவர் திட்டும் போதும் ,கோபப்படும்போதும் எனக்கு ரொம்ப பயமாகவே இருந்தது.
நாம் ஏதோ தப்பு செய்து விட்டோமோ என்ற எண்ணமும் வந்தது. அந்த அளவிற்கு ரோஸ்ட் பண்ணி இருந்தார். நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அப்பாடா என்று இருந்தது. அவரை ஓடிப்போய் கட்டிப்பிடித்து பழையபடி நம்ம அப்பாவிடம் பேசலாம் என்ற எண்ணம் வந்தது. இப்போது பழையபடி அவருடன் பேசும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.






