மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்னு சொன்னாலே இப்ப, நாச்சியப்பன் பாத்திரக்கடை கோப்பையா’ன்னு கேலி செய்றாங்க – சச்சின் சிவா வேதனை

0
692
Sachinsiva
- Advertisement -

நான் ஏமாத்தறவங்களா இருந்தால் சிவகார்த்திகேயன் உதவுவாரா? என்று மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட்டில் என்னுடைய தலைமையிலான டீம் பாகிஸ்தானை வென்றது என்று ராமநாதபுரம் வினோத் பாபு கூறி இருந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதோடு அமைச்சரில் இருந்து முதலமைச்சர் வரை என அத்தனை பேரையும் வினோத் பாபு ஏமாற்றி இருந்தார் என்று கடந்த வாரம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது.

-விளம்பரம்-

இதை அடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் எல்லாம் வினோத் பாபுவை வைத்து செய்து இருந்தார்கள். அதோடு அரசே இவ்வளவு கவன குறைவாக இருக்கலாமா? என்று சமூக ஊடங்களிலும் விமர்சித்து இருந்தார்கள். அதேபோல் இந்த பிரச்சினையால் உண்மையிலேயே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட மாற்று திறனாளிகள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் சின்னத்திரை நடிகரும், இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அசோசியேஷன் சார்பாக சமீபத்தில் நடந்த இலங்கை- இந்திய அணிகள் கலந்து கொண்ட போட்டிக்கு அட்வைஸரி கமிட்டி உறுப்பினராக இருந்தவர் நவீந்தர் மூர்த்தி.

- Advertisement -

நவீந்தர் மூர்த்தி அளித்த பேட்டி:

இவர் இது குறித்து கூறியிருப்பது, மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில் ஒரு கால், ஒரு கை ஊனமானவர்கள். அதிலும் ஒரு சில பேர் ரெண்டு கால்களுமே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வினோத் பாபு மாதிரியான ஆட்கள் விளையாடுவதை வீல் சேர் கிரிக்கெட் என்று சொல்வார்கள். மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டுக்கு என்று தமிழ்நாட்டில் நிறைய சங்கங்கள் இருக்கிறது. தங்களுடைய கிரிக்கெட் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஆதரித்து அங்கீகரிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இடம் இவர்கள் உதவிகள் கேட்டு பலமுறை முறையிட்டு பார்த்திருக்கிறார்கள்.

ஆனால், இதுவரையும் வாரியம் அவர்களை அங்கீகரிக்கவில்லை. அதனால் இந்த சங்கங்கள் எப்படி எல்லாம் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு போட்டிகளை நடத்துகிறார்கள். வெளிநாடுகளில் இருக்கிற இதே மாதிரியான அணிகளுடன் தொடர்பு கொண்டு சர்வதேச போட்டிகளில் எல்லாம் விளையாட செய்து இருக்கிறார்கள். மேலும், ஆக்ராவை தலைமையாகக் கொண்டு ‘திவ்யாங் கிரிக்கெட் கன்ட்ரோல் போர்டு ஆஃப் இந்தியா’ என்ற ஒரு அமைப்பு இயங்கி வருகிறது.

-விளம்பரம்-

மாற்று திறனாளி கிரிக்கெட் வீரர்கள் நிலை:

இது இந்தியா முழுக்க உள்ள மாற்று திறனாளி கிரிக்கெட் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு இடையே போட்டி நடத்துவது. ஆனால், வினோத் குமார் செய்த கலவரத்தால் மாற்றுத்திறனாளிகள் வைத்த கோரிக்கை எல்லாம் காணாமலே போய்விட்டது. இது ரொம்ப வருத்தத்துக்குரிய விஷயம் என்று கூறியிருந்தார். இவரை தொடர்ந்து சச்சின் சிவா கூறியிருந்தது, வினோத் பாபு ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பதை நாங்கள்தான் அரசாங்கத்திடம் சொன்னோம். ஆனால், இப்போ மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் என்று சொன்னாலே நீங்க அந்த நாச்சியப்பன் பாத்திரக்கடை கோப்பையான்னு எங்களை எல்லாரும் கேலி செய்கிறார்கள்.

சச்சின் சிவா அளித்த பேட்டி:

யாரோ ஒருத்தர் செய்த தவறுக்கு நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். என்னை மாதிரி நிறைய பேர் இந்த விளையாட்டை முழுசாக நேசிக்கிறார்கள். என்னுடைய கிரிக்கெட் ஆர்வத்தை பார்த்து தான் நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு நிறைய உதவிகளை செய்து கொண்டு வருகிறார். நான் ஏமாற்றுக்காரனாக இருந்தால் அவர் எனக்கு உதவி செய்வாரா? எங்களுடைய ஒரே கோரிக்கை ஒலிம்பிக் போட்டியில் மாற்று திறனாளிகள் தனியாக இருக்கிற மாதிரி கிரிக்கெட்டிலும் கொண்டு வர வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள், விளையாட்டு ஆர்வலர்கள், மூத்த கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் இது குறித்து சிந்தித்து நல்ல ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Advertisement