தீபாவளி ஷாப்பிங் செய்யப் போறீங்களா. பாதுகாப்பாக ஷாப்பிங் செய்வது எப்படி ? கூகுள்-ன் 3 முக்கிய டிப்ஸ் இதோ.

0
281
- Advertisement -

தீபாவளி என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது புதுத்துணி, பட்டாசு, பலகாரம் தான். இந்தியாவிலேயே மிகப்பெரிய பண்டிகையாக தீபாவளி விளங்குகிறது. இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் பண்டிகைக்காக ஆடைகள் முதல் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வரை என பல திட்டம் வைத்து இருப்பார்கள். மேலும், மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் தான் அதிகம் வாங்குகிறார்கள். நவீன தொழில்நுட்பம் தொடங்கியதிலிருந்தே மக்கள் அனைவரும் ஆன்லைனிலேயே தான் ஷாப்பிங் செய்கிறார்கள்.

-விளம்பரம்-
நிதி பரிமாற்றம்

இது பல வகையில் பயனுள்ளதாக இருந்தாலும் சில விஷயங்களில் நமக்கு பிரச்சனையாக உள்ளது. கொரோனா லாக்டவுன் போட்டாலும் ஷாப்பிங்க்கு எப்போதும் பஞ்சமில்லை. அதுவும் தீபாவளி தொடங்கப் போகிறது என்றாலே ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே மக்கள் ஷாப்பிங்கில் குதித்து விடுவார்கள். மேலும், கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் ஆன்லைனிலேயே ஷாப்பிங் செய்ய செய்து வருகிறார்கள்.

- Advertisement -

கொரோனா தொற்று மூலம் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ஆன்லைன் ஷாப்பிங்கை தான் அதிகம் விரும்புகின்றனர். அதிலும் பண்டிகை என்று ஒன்று வந்தாலே போதும் ஆன்லைன் வர்த்தகர்கள் இதற்காகவே பல விளம்பரங்களையும், தள்ளுபடிகளையும் அறிவித்து வாடிக்கையாளர்களை தன் வசம் இழுக்கிறார்கள். அதோடு தீபாவளி பண்டிகை என்றால் சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் ஷாப்பிங் நினைத்தால் குடும்பத் தலைவருக்கு கொஞ்சம் கஷ்டம் தான். இந்நிலையில் தீபாவளி ஷாப்பிங் பாதுகாப்பாக எப்படி செய்வது? என்று கூகுள் சில டிப்ஸ்களை வழங்கியுள்ளது. அது என்னென்ன என்று ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

நிதி பரிமாற்றம்:

-விளம்பரம்-

இந்த இக்கட்டான நேரத்தில் நாம் அனைவரும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வது தான் பாதுகாப்பு என்று கருதி செய்கிறோம். இந்த சூழ்நிலையில் பெரும்பாலான ஆன்லைன் தளத்தில் நிதி பரிமாற்றம் அதிகம் செய்யப்படுகிறது. இதனால் சைபர் கிரைம் பிறருடைய வங்கி கணக்கில் இருந்து இதற்கென்றே ஏமாற்றும் கும்பல் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதனால் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது பணம் பரிமாற்றம் செய்யும் போது பாதுகாப்பாக செய்ய வேண்டும்.

பழைய பாஸ்வோர்ட்:

ஆசிய பசிபிக் பகுதியில் இருக்கும் மக்கள் ஒரே பாஸ்வேர்டை பல தளத்திற்கு பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான். இதுகுறித்து கூகுள் செய்த ஆய்வில் 80% பேர் ஒரே பாஸ்வேர்டை பத்துக்கும் அதிகமான தளத்தில் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ஏதேனும் ஒரு தளத்தில் பாஸ்வேர்டு ஹேக் செய்யப்பட்டால் அனைத்து தளத்தில் இருக்கும் தரவுகளும் பாதிக்கப்படும். இதனால் பல விளைவுகள் ஏற்படும். இதில் பலருடைய வங்கி கணக்கு வைக்கப்பட்டிருப்பதால் பல நஷ்டம் ஏற்படும். இதனால் பாஸ்வேர்டை அனைவரும் கவனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இந்த மாதிரி பண்டிகை சமயங்களில் ஷாப்பிங் செய்யும்போது ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்யும் போது பாஸ்வேர்டை கவனமாக கையாள வேண்டும்.

பாதுகாப்பு வளையம்:

பொதுவாகவே நாம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் மொபைல் நம்பர் அல்லது ஈமெயில் மூலம் இரண்டு ஸ்டெப்புகளை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்கலாம். இதனால் வேறு யாராவது நம்முடைய மொபைல் நம்பரையோ, ஈமெயில் ஐடியையோ போட்டு பயன்படுத்தினாலும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அதனால் முடிந்த வரை அனைவரின் ஈமெயில் ஐடியை ஷாப்பிங் நேரத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. ஷாப்பிங் கார்ட் பொதுவாக ஷாப்பிங் செய்யும் தளம் HTTP பாதுகாப்பு கொண்டதா என்பதை முதலில் கவனிக்க வேண்டும். அதற்கு பிறகு தான் ஷாப்பிங் செய்ய வேண்டும். குறிப்பாக HTTP பாதுகாப்பு இல்லாத தளங்களில் நெட்பேங்கிங், யுபிஐ, கூகுள் பே, போன் பே போன்ற எந்தவிதமான நிதி பரிமாற்றம் தொடர்பான விஷயங்களை செய்யக்கூடாது. இதனால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.

சைபர் தாக்குதல்:

கொரோனா வைரஸ் தொடங்கிய காலத்தில் இருந்தே உலக நாடுகள் முழுவதிலும் இந்த சைபர் கிரைம் அளவு அதிகரித்துள்ளது. ஏனென்றால் மக்கள் அனைவரும் வெளியில் சென்று பொருள்கள் வாங்குவது பாதுகாப்பு இல்லாதது என்பதால் அனைவரும் ஆன்லைன் மூலமே பர்சேஸ் செய்கிறார்கள். இதனால் பண பரிமாற்றமும் ஆன்லைன் மூலம் அதிகம் நடைபெறுகிறது. இதை கருத்தில் கொண்டு சைபர் கிரைம் அளவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் தனி நபர் முதல் நிறுவன தரவுகளை திருடப்படும் அளவிற்கு சைபர் கிரைம் அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து மக்களும் பாதுகாப்பான முறையில் ஆன்லைன் ஷாப்பிங் செய்து சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..

Advertisement