ஒரு தமிழன் இங்க வந்து படம் எடுக்கறாண்டானு ஒரு 100 பேர் வந்துட்டாங்க, அப்போ புனீத் சார் செய்த விஷயம்.

0
629
samu
- Advertisement -

தமிழனுக்கு தோள் கொடுத்த புனித் என்று சமுத்திரகனி கூறிய செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமுத்திரகனி. இவருடைய இயக்கத்திலும் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சமுத்திரக்கனி அவர்கள் நடிகர் புனித் குறித்து எமோஷனலாக சில விஷயங்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார். கன்னட மொழியில் பவர் ஸ்டாராக இருந்தவர் புனித் ராஜ் குமார்.

-விளம்பரம்-

இவர் நடிகர் மட்டுமில்லாமல் பல சமூக சேவைகளை செய்துள்ளார். மேலும், இவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அநியாயமாக உயிர் இழந்து உள்ளார். இவருடைய இறப்பு செய்தி கன்னட மொழியில் மட்டும் இல்லாமல் பிற சினிமா உலக உலகிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் இறந்த செய்தியைக் கேட்டு தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகர்களும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

மேலும், புனீத் இறப்பு குறித்து பல உருக்கமான செய்திகளை சோசியல் மீடியாவில் பதிந்து வருகிறார்கள். இந்நிலையில் சமுத்திரகனி அவர்கள் புனித் ராஜ்குமார் குறித்து சில மோசமான விஷயங்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நாங்கள் போராளி படம் பண்ணும் போது நிறைய பிரச்சனை வந்தது. அப்போது எவனோ ஒரு தமிழன் வந்து படம் எடுக்கிறான் என்று 100 பேருக்கு மேல் வந்து எங்களை சூழ்ந்தார்கள்.

அங்கு நான், கேமராமேன் மட்டும் தான் இருந்தோம். எங்களை சுத்தி மொத்த பேரும் வந்தாங்க. அப்போ புனீத் அங்கு கை அசைத்து என் தோள் மேல் கையை போட்டு இவர் என் ப்ரோ என்று சொன்னார். அப்படியே மொத்த பேரும் கிளம்பி போய்ட்டாங்க. கலைக்கு மொழி இல்லை என்று நிரூபித்து விட்டார். அவர மாதிரி ஒரு உன்னதமான மனிதர் பார்க்க முடியாது என்று கூறி இருந்தார். இப்படி சமுத்திரக்கனி கூறிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement