தங்கத்தை பத்திரம் மூலம் முதலீடு செய்வதன் பலன் – SBI சொல்லும் 6 முக்கிய காரணங்கள்.

0
903
gold
- Advertisement -

எஸ்பிஐயில் தங்க பத்திரம் விற்பனை தொடங்கி உள்ளது. தங்க பத்திரம் என்றால் என்ன? இது யார் எல்லாம் வாங்கலாம்? இதில் முதலீடு செய்தால் என்ன லாபம் கிடைக்கும் என்பதை பற்றிய விரிவான விவரங்களை இங்கு பார்க்கலாம். பொதுவாகவே மக்கள் தங்கத்தை நகையாகவோ, நாணயங்களாகவோ தான் வாங்குவார்கள். ஆனால், தங்கத்தை இந்த மாதிரி தங்க பத்திரம் மூலம் முதலீடு செய்ய சிலர் தான் விரும்புவார்கள். இது போன்றவர்களை கருத்தில் கொண்டு தான் 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் தங்கத்தை பொருள் வடிவில் வாங்காமல் பத்திர வடிவில் வாங்கி பலனை பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில வாரங்களில் தங்க பத்திரங்களை அரசு விற்பனை செய்யும்.

-விளம்பரம்-
New federal order bans extension of gold savings schemes beyond 365 days

அதன்படி தற்போது தங்க பத்திரங்கள் விற்பனை நடைபெற இருக்கிறது. தனி நபர் ஒருவர் குறைந்தபட்சம் ஒரு கிராமில் இருந்து அதிகபட்சம் 500 கிராம் எடைக்கு இணையாக தங்க பத்திரங்களை வாங்கலாம். மேலும், இணையம் மூலம் விண்ணப்பித்து தொகையை செலுத்துபவர்கள் 50 ரூபாய் தள்ளுபடி பெறலாம். நேரடியாக செலுத்துபவர்கள் வங்கிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட சில அஞ்சலகங்களில் பத்திரங்களை வாங்க முடியும். மேலும், இந்தப் பத்திரங்களை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அரசிடம் மீண்டும் திருப்பி தந்து அப்போதைய தங்கத்தின் விலைக்கு ஏற்ப பெற்றுக் கொள்ளலாம். இது மட்டுமில்லாமல் முதலீட்டு தொகைக்கு ஆண்டுக்கு இரண்டரை சதவீதம் வட்டி அரசு தருகிறது.

- Advertisement -

நமக்கு வேண்டும் என்றால் ஐந்து ஆண்டுகளில் கூட பத்திரத்தை திரும்ப தந்து அப்போதைய தங்கத்தின் விலைக்கு பெற்றுக் கொள்ளலாம். தங்கத்தின் விலை உயர்வுடன் இரண்டரை சதவீத வட்டியும் கிடைப்பதால் இது மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக உள்ளது. அது மட்டுமில்லாமல் இது அரசினால் வழங்கப்படும் திட்டம் என்பதால் மிக நம்பகத்தன்மையானது. இந்தியாவில் கடந்த ஒரு வருடமாகவே தங்கத்தின் மீதான முதலீடு அதிகமான அளவில் லாபம் கிடைத்துள்ளது. கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து தங்கத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. தற்போதைய சந்தை கணிப்புகளை பார்க்கும்போது அடுத்த சில வாரங்களுக்குள் தங்கம் மீதான முதலீடு அதிகப்படியான லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜூலை 16ஆம் தேதி சவ்ரின் கோல்ட் பாண்டு என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் ஒரு சவ்ரின் கோல்டு பாண்டு திட்டத்தில் ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தை 4807 ரூபாய் விலையில் பத்திரமாக விற்பனை செய்யப்படுகிறார்கள். இன்று அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிலையில் தங்கத்தையும் டிஜிட்டல் முறையில் அதுவும் பத்திரமாக வாங்க பல வசதிகள் உருவாகியுள்ளது. மேலும், தங்க பத்திரம் வாங்குவது சிறந்தது என எஸ்பிஐ சில முக்கிய காரணங்களை அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் இருக்கும் பிற தங்க முதலீடு திட்டங்களை விட அதிகமான லாபத்தை தரக்கூடிய ஒன்றாக தங்கம் பத்திரம் விளங்குகிறது. அதுமட்டுமில்லாமல் இதில் வருடத்திற்கு இரண்டரை சதவீதம் வட்டி கிடைக்கிறது.

-விளம்பரம்-

அதற்கு வருமானத்திற்கு வரி உண்டு. ஆனால், இப்பத்திர முதிர்வு காலம் வரையில் வைத்திருந்தால் கேப்பிடல் கெய்ன் டாக்ஸ் இல்லை. ஆனால், கோல்டு ஈடிஎப் அல்லது கோல்டு பண்டு திட்டத்தில் 3 வருடத்திற்குப் பின்பு உருவாகும் கேப்பிடல் கெய்ன்-க்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும். தங்க பத்திரத்தில் முதலீடு செய்திருந்தால் அதை வைத்து வங்கிகளில் கடன் பெற முடியும். வங்கிகள் இந்த தங்க பத்திரத்தை சொத்தாக கருதி உங்களுக்கு கடன் அளிப்பார்கள். பொதுவாகவே நாம் தங்கத்தை நகையாக அல்லது நாணயமாக வாங்குவோம். அதை பாதுகாப்பதற்கு என்று பல வழிகளை தேடுவோம். ஆனால், தங்கப் பத்திரத்திற்கு இதுபோன்ற பாதுகாப்பு அவசியம் தேவையில்லை.

பத்திரம் டிஜிட்டல் வடிவில் எளிதாக பாதுகாக்க முடியும். பத்திரத்தை எளிதான முறையில் அதிக லாபத்தில் பணமாக்க முடியும். டிஜிட்டல் முறை என்றால் நொடிகளில் பெற முடியும். ஆனால், தங்கமாக வாங்கினால் கடைகளுக்கு சென்று வாங்கி அதை விற்றால் குறைந்த விலையில் கிடைக்கும். தங்கத்தை நகையாக வாங்கினால் ஜிஎஸ்டி, செய்கூலி, சேதாரம் என்று பல வகையில் நமக்கு நஷ்டம் ஏற்படும். ஆனால், சவ்ரின் கோல்டு பாண்ட் வழங்கப்படும் தங்கப் பாத்திரத்தில் இதுபோன்ற எந்தவிதத் தொல்லையும் கிடையாது. இதுபோன்ற விஷயம் பல பேருக்கு தெரியாத ஒன்றாக உள்ளது. இனிமேலாவது இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்து மக்கள் நன்மை பெற வேண்டும்.

Advertisement