கறுப்பர் கூட்டம் முருக பெருமானை இழிவு படுத்தும் போது மூ*** இருந்த – ரஞ்சித்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

0
1279
ranjith

பெரியார் சிலை மீது காவி சாயம் தெளிக்கப்பட்ட விவகாரத்தில் இயக்குனர் ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பெரியாரின் சிலை மீது காவி சாயத்தை பூசி சென்றுள்ளனர். இது தொடர்பாக தி மு க. பா ம க, பெரியார் இயக்கத்தினர் தங்களது கடும் கடந்தங்களை தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, பெரியார் சிலையை அவமதித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில்,போத்தனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அருண்கிருஷ்ணன் என்பவர் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட விவகாரத்தில் தானாக வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். இவர் பாரத்சேனா அமைப்பை சேர்ந்தவர்.அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க : உனக்கும் குழந்தை இருக்கு – வனிதாவின் பேட்டி. சூர்யா தேவி கொடுத்த பதிலடியை பாருங்க.

- Advertisement -

அதில், அதில், தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் காவி ஊற்றி இழிவுபடுத்துவது வாடிக்கையாகி விட்டது. இந்துத்துவ பிற்போக்குத்தனத்தை எதிர்ப்போரை பொது சமூகத்திற்க்கு எதிரியாக மாற்றுதல், அழித்தொழித்தல் என தங்கள் வேலைத்திட்டத்தை மத உணர்வை தூண்டி செயல்படுத்திக்கொள்கிறார்கள்! விழிப்படைவோம்என்று பதிவிட்டுள்ளார்.

ரஞ்சித்தின் இந்த பதிவிற்கு பெரியாரின் ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்தாலும். சமீபத்தில் கறுப்பர் கூட்டம் இந்துக் கடவுள் முருகனை கொச்சைப்படுத்தியவர்கள் குறித்து ஏன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர். மேலும், கறுப்பர் கூட்டம் முருக பெருமானை இழிவு படுத்தும் போது மூடிட்டு தானே இருந்த , இப்போவும் அப்படியே இருன்றெல்லாம் கமன்ட் அடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement