இன்னொரு ஜெய் பீமா ‘கார்கி’ – முழு விமர்சனம் இதோ.

0
848
saipallavi
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை சாய் பல்லவி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்த வகையில் தற்போது சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கார்கி. இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சாய் பல்லவி உடன் காளி வெங்கட், ஆர்.எஸ். சிவாஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மேலும், இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். ஒன்பது வயது குழந்தையை நான்கு வடமாநில இளைஞர்கள் கற்பித்து விடுகின்றனர். இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்படி ஒரு நிலையில் ஐந்தாவது நபராக சாய்பல்லவியின் அப்பா ஆர்எஸ் சிவாஜி கைதாகிறார். இதனால் சாய்பல்லவியின் குடும்பமே பல பிரச்சனைகளை சந்திக்கிறது. பின் சட்ட போராட்டங்களின் மூலம் சாய்பல்லவி தன்னுடைய அப்பாவை காப்பாற்ற முயலுகிறார். இறுதியில் அவருக்கு என்ன ஆனது? சாய்பல்லவி தன் தந்தையை காப்பாற்றினாரா? பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைத்ததா? என்பது படத்தின் மீதி கதை.

- Advertisement -

படத்தில் சாய்பல்லவி ஆசிரியராக நடித்திருக்கிறார். எந்தவித மேக்கப்பும் இல்லாமல், மிக எளிமையாக அழகாக காட்சியளிக்கிறார். படம் முழுக்க நம்ம பக்கத்து வீட்டு பெண் போலவே சாய்பல்லவி இருக்கிறார். சாய்பல்லவியின் எதார்த்தமான நடிப்பும், அழகும் நம்மை எதையும் யோசிக்க விடாமல் கதைக்குள் இழுத்துச் செல்கிறது. எமோஷனல் காட்சிகளில் சாய்பல்லவி நடிப்பை பார்த்து பலரும் கண்ணீர் விட்டார்கள் என்று சொல்லலாம். அந்தளவிற்கு தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சாய்பல்லவி.

தன்னுடைய அப்பாவை காப்பாற்ற துடிக்கும் ஒரு மகளாக பல இடங்களில் கிளாப்ஸ்களை வாங்கி இருக்கிறார் சாய்பல்லவி. வழக்கறிஞராக வரும் காளி வெங்கட் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறார். இந்த படம் இவருக்கு ஒரு தரமான படம் என்று சொல்லலாம். பல இடங்களில் சோகமாக நகரம் காட்சியில் கூட தன்னுடைய முகபாவனைகள் மற்றும் கவுண்டர்களின் மூலம் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறார். சொல்லப்போனால், படத்தின் ஹீரோ இவர் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

சாய்பல்லவியின் அப்பாவாக ஆர்.எஸ். சிவாஜி , நடிகர் சரவணன், ஜெயப்பிரகாஷ் போன்றோர் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கின்றனர். படத்தில் கேமியோ ரோலில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். நீதிக்காக போராடும் ஒரு சாதாரண ஆசிரியரின் கதையை தத்துரூபமாக எந்தவித சிரமமும் இல்லாமல் சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கௌதம் ராஜேந்திரன். சாய் பல்லவியின் அப்பாவிற்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று பார்ப்போரை பதற வைக்கும் அளவிற்கு கதை சூப்பராக அமைந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இயக்குனர் படத்தில் பல புதுமையான விஷயங்களை புகுத்தி இருக்கிறார். முக்கியமாக கோட் ரூமில் நடக்கும் செயல்கள் அனைத்தும் பிரமாதமாக இருக்கிறது. திருநங்கைகள் நீதிபதியாக வந்தாலும் அவர்கள் இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது? என்பதை படத்தில் காண்பித்திருக்கிறார். ஒருவர் தவறுதலாக ஒரு பெரிய வழக்கில் கைதாகும் போது அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் என்ன விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை இந்த படம் நமக்கு உணர்த்துகிறது.

படத்தின் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை பக்க பலமாக உள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் யாரும் பார்க்காத அளவிற்கு இருப்பது இந்த படத்திற்கு பெரிய பலம். இன்றைய சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை பற்றி படத்தில் ஆழமாக பேசப்பட்டிருக்கிறது. சில இடங்களில் படம் மெதுவாக சென்றாலும் படத்தில் சொல்லப்படும் செய்தி, கிளைமாக்ஸ் ட்விஸ்ட் படத்தை பார்க்க தூண்டுகிறது.

குறைகள் :

சாய்பல்லவியின் எதார்த்த நடிப்பும், அழகும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது.

படத்தின் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

எந்த தவறும் செய்யாமல் ஒரு வழக்கில் சிக்கிக் கொண்ட குடும்பம் படும் இன்னல்களை அழகாக காண்பித்திருக்கிறார்கள்.

இன்றைய சமுதாயத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

திரைக்கதை சூப்பர்.

பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

குறைகள் :

சில இடங்களில் மெதுவாக நகர்வது போல் இருக்கிறது.

காமெடி காட்சிகள் குறைவு.

மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய குறைபாடுகள் எதுவும் இல்லை.

இறுதி அலசல்:

எல்லோரும் சென்று பார்க்கும் படமாக கார்கி அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் கார்கி- நியாயம் வெல்லும்

Advertisement