பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சாரா அலி கான். இவர் பாலிவுட் நடிகர் சைப் அலிகானின் மகன். அதாவது சயீப் அலிகானின் முதல் மனைவியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சுஷாந்த் சிங் ராஜ்புட்டுடன் சேர்ந்து கேதர்நாத் என்ற படத்தில் நடித்தார் சாரா. அதனை தொடர்ந்து சாரா அவர்கள் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து சிம்பா என்ற படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் கார்த்திக் ஆர்யனுடன் சேர்ந்து சாரா நடித்த லவ் ஆஜ் கல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சாரா அவர்கள் வருண் தவானுக்கு ஜோடியாக கூலி நம்பர் ஒன் படத்தில் நடித்து உள்ளார்.
அந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. பிறகு இவர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்தில் நடித்து வருகிறார் . அந்த படத்தில் தனுஷ், அக்ஷய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில் நடிகை சாரா அவர்கள் லாக்டவுனால் வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்கு தன் பழைய புகைப்படங்கள், வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.
அதில் சாரா அவர்கள் பார்ப்பதற்கு படு குண்டாக உள்ளார். முதலில் பள்ளி படிக்கும் காலத்தில் சாரா அவர்கள் பயங்கர குண்டாக இருந்தாராம். பெரிய கண்ணாடி அணிந்து குண்டாக இருந்த சாராவுக்கு தன் அம்மா, அப்பா, பாட்டி போல் சினிமாவில் நுழைய வேண்டும் என்ற ஆசை வந்தது. அதனால் அவர் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருந்ததும், கடினமாக ஜிம்மில் ஒர்க்அவுட் செய்தும் தனது உடல் எடையை சீக்கிரமாக குறைத்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை சாரா தான் ஒல்லியாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்கள், புகைப்படங்களையும் போஸ்ட் செய்து உள்ளார். முயற்சி திருவினை ஆக்கும் என்பதை சாரா நிரூபித்து விட்டார். அந்த வீடியோவை பார்த்த பலரும் சாராவை பாராட்டியுள்ளனர். இதோ அந்த வீடியோ.