ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு வைத்து இருக்கும் வேண்டுகோள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்து குறித்த செய்திகள் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். தொடக்கத்தில் பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ரஹ்மான் முதல் முதலில் இசையமைத்தது மலையாள படத்தில் தான். ஆனால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே தமிழில் 'ரோஜா' படம் வெளியானதால் ரோஜா படமே ரஹ்மானின் முதல் படமாக மாறியது.

மேலும், இவர் இசை அமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டானது. அதை தொடர்ந்து கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது நாம் அறிந்ததே.
ஏ.ஆர். ரஹ்மான் குறித்த தகவல்:
இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்து செய்தி திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆற்றியது. சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா , திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து நான் ரஹ்மானை பிரிந்து செல்வது கடினமான முடிவு தான். இத்தனை வருடங்கள் வாழ்க்கையை நடத்திய பிறகு சமீப காலமாக எங்களுக்குள் வலியும் கவலையும் அதிகமாகின. பதட்டங்கள் உருவாகி ஒரு தீர்க்க முடியாத இடைவெளி உருவாகி இருக்கின்றன. அந்த இடைவெளியை நிரப்ப முடியவில்லை.
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து :
அதனால் கடுமையான மனவலியில் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான், தனது மனைவி சாய்ரா பானுவின் அறிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் விவாகரத்துச் செய்தியை உறுதி செய்திருந்தார். ஏற்கனவே சமீப காலமாகவே சினிமா பிரபலங்களின் விவாகரத்து செய்தி தான் இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஏ.ஆர். ரகுமானின் விவாகரத்து செய்தி பலருக்குமே பேரிடியை கொடுத்திருக்கிறது.

விவாகரத்து குறித்த எழுந்த சர்ச்சை:
அது மட்டுமில்லாமல் ஏ.ஆர். ரகுமான் இசை குழுவில் இருக்கும் பெண் கலைஞரான மோகனிடே என்பவர் தன்னுடைய கணவரையும் பிரிய இருப்பதாக அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார். இதனால் ரகுமானுக்கும் அந்த பெண் கலைஞருக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், அதனால்தான் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் செய்திகள் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் இருவரையும் தொடர்பு படுத்தி பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. மேலும், அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் வெளியிட்டு இருப்பதாகவும், அதை உடனடியாக நீக்க வேண்டும். நிக்காவிட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டப்பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் ரகுமான் சார்பில் வழக்கறிஞர் பதிவு போட்டிருந்தார்.
View this post on Instagram
ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி பதிவு:
இந்த நிலையில் தன்னுடைய கணவர் குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி பேசி வெளியிட்ட ஆடியோவில், ஏ. ஆர். ரகுமான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் ஒரு அற்புதமான மனிதர். அவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரை பார்க்க முடியாது. கடந்த சில மாதங்களாக எனக்கு உடல் நலம் சரியில்லை. தற்போது நான் மும்பையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். அதன் காரணமாகத்தான் ஏ.ஆர் ரகுமானிடம் இருந்து பிரேக் எடுத்துக் கொள்ள விரும்பினேன். என் உடல் நலக்குறைவு தான் இந்த முடிவுக்கு காரணம். அவருக்கு யாருடனும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. அவர் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை ரொம்ப பெரியது. அந்த அளவுக்கு சிறந்த மனிதர். நான் அவரை அந்த அளவுக்கு நேசிக்கிறேன். அவரும் அதே காதலை தான் என் மீது வைத்திருக்கிறார். நாங்கள் இருவருமே எங்களுக்கு தேவைப்படும் பிரேக் தான் எடுத்திருக்கிறோம். இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இங்கு என்னுடைய சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் சென்னைக்கு திரும்புவேன். தயவு செய்து அவர் மீது அவதூறு பரப்புவதை நிறுத்துங்கள் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.






