காட்பாதர் படத்தில் நடிக்க சல்மான் கான் போட்ட கண்டிஷன், மிரண்டுபோன சிரஞ்சீவி – என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க

0
441
salmankhan
- Advertisement -

சிரஞ்சீவி படத்தில் நடிக்க சல்மான் கான் போட்ட கண்டிஷன் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிரஞ்சீவி. ‘மெகா ஸ்டார்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் தெலுங்கில் ‘பிராணம் கரீடு’ என்ற படத்தின் மூலம் தான் நடிகரானார். இந்த படத்தை இயக்குநர் கே.வாசு இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் சிரஞ்சீவி நடித்திருக்கிறார். சிரஞ்சீவியின் 150-வது படம் 2017-ஆம் ஆண்டு டோலிவுட்டில் ரிலீஸானது. ‘கைதி நம்பர் 150’ என டைட்டில் சூட்டப்பட்டிருந்த அந்த படத்தை பிரபல இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கியிருந்தார். இப்படம் ‘தளபதி’ விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காம். இதனை தொடர்ந்து இவர் சைரா நரசிம்மா ரெட்டி என்ற படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த திரைப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு வெளி வந்தது. மேலும், பாகுபலி படத்திற்கு அடுத்து பிரம்மாண்டமான அளவிலும், அதிக பட்ச செலவிலும் “சைரா நரசிம்ம ரெட்டி ” படம் வந்தது. இந்தப்படம் சுதந்திரப் போராட்டத்திற்கு முக்கிய காரணமான நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கையை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தில் சிரஞ்சீவி, சுதீப், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளார்கள்.

- Advertisement -

சிரஞ்சீவி திரைப்பயணம்:

இதனைத் தொடர்ந்து ‘ஆச்சார்யா’ என்ற புதிய படத்தில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை கொரட்டால சிவா இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு காஜல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சிரஞ்சீவி நடிக்கும் படம்:

இந்நிலையில் சிரஞ்சீவி படத்தில் நடிக்க சல்மான் கான் போட்ட கண்டிஷன் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது நடிகர் சிரஞ்சீவி அவர்கள் காட்பாதர் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து கொடுக்க வேண்டுமென்று சிரஞ்சீவி சல்மான் இடம் கேட்டுக் கொண்டார். உடனே சல்மான்கானும் மறுப்பு தெரிவிக்காமல் நடித்துக் கொடுக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதன்படி இந்த படத்திற்கான படப்பிடிப்புக்காக சல்மான்கான் சமீபத்தில் ஐதராபாத் வந்திருந்தார்.

-விளம்பரம்-

சிரஞ்சீவி படத்தில் சல்மான் கான்:

அவரை சிரஞ்சீவி மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்று இருக்கிறார். மேலும், இந்த படத்தில் நடித்து கொடுப்பதற்காக தயாரிப்பாளர் தரப்பில் 20 கோடி சம்பளம் சல்மான் கானுக்கு கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், சல்மான்கான் சம்பளம் வாங்க முடியாது என்று தெரிவித்திருந்தார். பின் கட்டாயம் பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சிரஞ்சீவியும், தயாரிப்பு நிறுவனமும் கேட்டுக்கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சல்மான்கான் பணம் கொடுப்பேன் என்று கட்டாயப் படுத்தினால் இப்படத்தில் இருந்து வெளியேறி விடுவேன் என்று எச்சரித்தார்.

சல்மான் கான் சம்பளம் வாங்க மறுத்த காரணம்:

ஏனென்றால், சல்மான்கானும் சிரஞ்சீவியும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். அதனால் இப்படத்தில் நடிக்க தனக்கு சம்பளம் எதுவும் தேவையில்லை என்று சல்மான்கான் கண்டிப்புடன் சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. அவரது பதிலை கேட்டு படப்பிடிப்பு குழுவினர் வாயடைத்துப் போய் நின்றனர். மேலும், சல்மான்கான் காட்பாதர் படத்தில் 20 நிமிட காட்சிகளில் நடிக்கிறார். கடந்த சில நாட்களாகவே சல்மான்கான் இடம்பெறும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. லூசிபெர் என்ற மலையாள படத்தை மையமாக வைத்து காட்பாதர் படம் எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisement