துல்கர் சல்மான் போலீசாக கலக்கி இருக்கும் ‘சல்யூட்’ – முழு விமர்சனம் இதோ.

0
1041
- Advertisement -

இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நேற்று ஓடிடி தளத்தில் வெளிவந்த படம் சல்யூட். இந்த படத்தை வே பாரர் பிலிம்ஸ்- துல்கர் சல்மான் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கர் சல்மான், மனோஜ் கே ஜெயன், டயானா பெண்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். துல்கர் சல்மான் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் படம் தான் சல்யூட். மேலும், ஒடிடியில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

மும்பை போலீஸ் என்கிற கான்செப்டில் படத்தை தொடங்கியிருக்கிறார்கள். ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியிருக்கும் போலீஸ் படம் பல எதிர்பார்ப்புகளுடன் நேற்று வெளியாகி இருந்தது. படத்தில் அண்ணன் மனோஜ் கே ஜெயன் போலீஸ் டிஎஸ்பியாக இருக்கிறார். அவருக்கு கீழ் வேலை செய்யும் எஸ்ஐயாக தம்பி துல்கர் சல்மான் நடித்து உள்ளார். அரசியல் ரீதியான செல்வாக்கு உள்ள நபர் ஒருவர் அவரது மனைவியுடன் சேர்த்து கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை விரைவாக கண்டுபிடிக்க சொல்லி அரசியல் கட்சியிடம் இருந்தும், உயர் அதிகாரிகளிடம் இருந்தும் மனோஜ் கே ஜெயனுக்கு பிரஷர் கொடுக்கப்படுகிறது.

- Advertisement -

படத்தின் கதை:

குற்றவாளியை பற்றி தகவல் கிடைக்காத நிலையில் தனது தங்கையின் திருமணத்திற்காக பணம் கேட்டு இல்லை என மறுக்கப்பட்ட வினோத் சாகர் என்பவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என அவருக்கு எதிரான ஆதாரங்கள் எடுக்கப்படுகிறது. இதனால் அவர் சிறையில் தள்ளப்படுகின்றனர். காவல்துறையில் நேர்மையாக இருக்க வேண்டும், ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் துல்கர் சல்மான் இருக்கிறார். பின் இந்த வழக்கை விசாரித்த துல்கர் சல்மானுக்கு அவருடைய அண்ணனே உண்மைக்கு மாறாக ஒரு நிரபராதிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது தெரிய வருகிறது.

படத்தின் கிளைமாக்ஸ்:

இதனால் அந்த வழக்கில் உண்மையான குற்றவாளி யார்? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் துல்கர் சல்மான் இறங்குகிறார். இதனால் அண்ணன் தேவையில்லாமல் தோண்டி என் பெயரை கொடுக்காதே என்று துல்கர் சல்மானிடம் சண்டை போடுகிறார். பின் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி துல்கர் சல்மானுக்கு பல்வேறு முட்டுக்கட்டை போடுகிறார். அதையெல்லாம் மீறி துல்கர் சல்மான் குற்றவாளியை கண்டுபிடிக்க போராடுகிறார். கடைசியிலிருந்து நிஜமான குற்றவாளியை நெருங்கும் வேளையில் துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி கிடைத்தது. அது என்ன? அந்த மர்ம நபர் யார்? துல்கர் சல்மான் அவரை பிடித்தாரா?

-விளம்பரம்-

படத்தில் துல்கர் கதாபாத்திரம்:

உண்மை குற்றவாளியை பிடிப்பதன் மூலம் துல்கர் சல்மானின் அண்ணனுக்கு சிக்கல் ஏற்பட்டதா? இதெல்லாம் தான் படத்தின் கிளைமாக்ஸ். படத்தில் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் துல்கர் நடித்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாக உள்ளது. ஆனால், ரசிகர்கள் எல்லோரும் துரைசிங்கம் அளவிற்கு இமாஜின் செய்திருக்கும் நிலையில் கொஞ்சம் ஏமாற்றம் தான். அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையில் எதிராக அதிரடி ஆக்சன்களில் துல்கர் சல்மான் இறங்கி அடிக்காமல் ஒரு புலனாய்வு அதிகாரியாக படம் முழுவதும் அண்டர்பிளான் வேலை செய்கிறார். அதுவும் ஒரு நேர்மையான கஞ்சி போட்ட விரைப்பான அதிகாரியாக இந்த படத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.

படத்தில் பிற நடிகர்கள்:

இதற்கு முன்பு பார்த்த படங்களில் இருந்து இந்த படத்தில் மிகவும் வித்தியாசப்பட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் மனோஜ். வழக்கம்போல் படத்தில் கதாநாயகன் சோர்ந்து போகும் போது அவருக்கு தைரியம் கொடுக்கும் வகையில் பாலிவுட்டிலிருந்து டயானா பெண்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் தவிர பெரிதாக இவருடைய கதாபாத்திரம் பேசப்படவில்லை. இவர்கள் தவிர படத்தில் துல்கர் சல்மானுக்கு உதவும் போலீஸ் அதிகாரிகளும், அவருக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் கையாண்ட விதம்:

படத்தில் ஆங்காங்கே சில காட்சிகள் கிளாப்ஸ் வாங்கி தந்திருக்கிறது. இருந்தாலும் படத்தில் ஆக்ஷன் காண்பித்து இருந்தால் இன்னும் விறுவிறுப்பாக சென்று இருக்கும். இந்த படம் முழுக்க முழுக்க பக்கா கமர்சியல் படமாக இருக்கிறது. கடைசியில் கொலையாளி யார்? என்ற சஸ்பென்ஸை இயக்குனர் கையாண்ட விதம் சிறப்பாக அமைந்தது. ஆனால், படத்தின் கதையை இன்னும் அழுத்தமாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு சென்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும். முதல் பாதி முழுவதும் மெதுவாக நகர்ந்தது. ஆகவே படம் ஒரு முறை சென்று பார்க்கலாம், சுமாரான படம் என்றே கூறப்படுகிறது.

பிளஸ்:

ஒரு சிறப்பான போலீஸ் அதிகாரியாக துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ஆங்காங்கே சஸ்பென்ஸ் வைத்திருப்பது கூடுதல் பலம்.

இயக்குனர் கதையை கொண்டு சென்ற விதம் சிறப்பு.

மைனஸ்:

முதல் பாதி மெதுவாக சென்றது மக்கள் மத்தியில் சலிப்படைய செய்திருக்கிறது.

ஆக்ஷன் அதிரடி காட்சிகள் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம்.

கதாநாயகி எதுக்கு வருகிறார் என்று தெரியவில்லை.

திரைக்கதையில் இன்னும் அழுத்தம் இருந்திருக்கலாம்.

வழக்கமான கதையை தான் இயக்குனர் எடுத்து இருக்கிறார்.

மொத்தத்தில் சல்யூட் படம்- கை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement