சூப்பர் சிங்கர்ல் ஜெயிச்சா பாடகர் ஆகலாம், ஆனா தோத்தா – Reject செய்த நிகழ்ச்சிக்கே சென்று மாஸ் காட்டிய சாம் CS

0
1335
samcs
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தொடங்கி ஒளிபரப்பாகிவரும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குடும்ப தலைவர்கள், முதியவர்கள், இளைய தலைமுறையினர் என அனைவரையும் தரப்பு மக்கள் மத்தியிலும் மிகப்பிரபலமான உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூம புகழ் பெற்றவர்கள் ஏராளம் என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று பாடிய பல பாடகர்கள் தற்போது சினிமா துறையில் கலக்கி கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் சீசன் 9 :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை மகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகியோ தொகுத்து வழங்கி வருகின்றனர். இவர்களின் நகைச்சுவையான தொகுத்து வழங்குதலுக்கே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் 9 சீசன் தொடங்கியுள்ளது. மேலும் சமீபத்தில் தான் இந்த நிக்கட்சியின் பிரபல தொகுப்பாளராக மகாபா ஆனந்த் விலகியதாக தகவல்கள் வெளியாகி ரசிங்கர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இவருக்கு பதிலாக ரியோ ராஜ் தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.

சாம் சி.எஸ்யை நிராகரித்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி :

இந்தநிலையில் சமீபத்தில் பிரபல பாடகரான சாம் சி.எஸ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் காலத்து கொண்டார். அவரோடு தொகுப்பாளினி பிரியங்கா , மகாபா , ஆர்.ஜே.சூர்யா என பலர் இருந்தனர். அப்போது பிரியங்கா பாடியதை பாராட்டிய சாம் “தனக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும் ஏனெற்றால் இந்த நிகழ்ச்சி தான் தன்னை 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நிராகரித்தாக கூறினார்.

-விளம்பரம்-

சாம் கூறிய மாஸ் கருத்து :

மேலும் தன்னிடம் கடந்த சீசனில் தோல்வியடைந்த ஒருவர் வந்து தான் தோற்றுவிட்டதாக சொல்லும் போது. நான் அதற்கு நீ வெற்றிபெற்றால் பாடகராகளாம் தோல்வியடைந்தால் இசையமைப்பாளர் ஆகலாம் என கூறினேன் என்று இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் சாம் “ஓர் இரவு” என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக்கினார். பின்னர் அம்புலி, கடலை போன்ற படங்களுக்கு இசையமைத்து கொடுத்தார்.

தென்னிந்தியாவை கலக்கும் சாம் சி.எஸ் :

ஆனால் இவர் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் வேத பதின் மூலம் தமிழ் சினிமாவில் பலரது கவனத்தை ஈர்த்தார். அதற்கு பிறகு அடங்காமாறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி போன்ற பல படங்களுக்கு இசையமைத்து கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் கலக்கி வருகிறார். மேலும் சமீபத்தில் வெளியாகி ரசிங்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் பகாசூரன், குமாரி மாவட்டத்தின் தக்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து கொடுத்தார். அதோடு சில பாலிவுட் இனைய தொடர்களுக்கு இசையமைத்து கொண்டு மிகவும் பிசியாக இருக்கிறார்.

Advertisement