திருமணத்தில் நடனமாடும் நடிகர்கள் – லெப்ட் ரைட் வாங்கி விமர்சித்த கங்கனா

0
357
- Advertisement -

திருமண விழாக்களில் நடனமாடும் நடிகர்கள் குறித்து நடிகை கங்கனா ரணாவத் கூறி இருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட் சினிமாவில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத். இவர் முதலில் மாடல் அழகியாக இருந்து தான் திரைப்பட நடிகை ஆனார். 2006 ஆண்டு வெளிவந்த ஹிந்தி திரைப்படம் மூலம் தான் இவர் சினிமா உலகில் தோன்றி இருந்தார்.

-விளம்பரம்-

பின் தமிழில் இவர் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த ”தாம் தூம்” படத்தின் முலம் அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதன் பின் இவருக்கு தமிழில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தார். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் கங்கனா. பலரும் இவரை பாலிவுட் நயன்தாரா என்று அழைக்கிறார்கள். அதோடு இவர் இந்தியில் கதாநாயாகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

- Advertisement -

கங்கனா திரைப்பயணம்:

மேலும், தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவந்த ‘தலைவி’ படத்தில் கங்கனா நடித்தார். இந்த படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கி இருந்தார். இந்த படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது. இதை அடுத்து சமீபத்தில் வந்த ஹிந்தி ரியாலிட்டி நிகழ்ச்சியை நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி இருக்கிறார். இப்படி இவர் தன்னுடைய கேரியரில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி விடுகிறார்.

கங்கனா பதிவிட்ட புகைப்படம்:

அந்த வகையில் சமீபத்தில் கங்கனா அவர்கள் தன்னுடைய தாய் விவசாய நிலத்தில் வேலை செய்த புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே, கங்கனாவின் தாயார் விவசாய நிலத்தில் வேலை செய்ததை குறித்து பாராட்டி புகழ்ந்து பேசி இருந்தார்கள். இந்நிலையில் இதற்கு நடிகை கங்கனா அவர்கள் பதில் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறி இருந்தது, என்னுடைய வருமானத்தினால் என்னுடைய தாய் பணக்காரராகவில்லை.

-விளம்பரம்-

கங்கனாவின் பதிவு:

அதோடு என்னுடைய குடும்பத்தில் அரசியல் தலைவர்கள், உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் என நிறைய பேர் இருக்கிறார்கள். இருந்தாலும், என்னுடைய அம்மா 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். சினிமா மாபியா மீது நான் இந்த அளவிற்கு ரியாக்ட் ஆகுவதற்கு காரணம் என்னுடைய அம்மா தான். அதனால் தான் சில நடிகர்களைப் போல நான் திருமணங்களில் என்னுடைய தரத்தை குறைத்து கொண்டு நடனமாட விரும்புவதில்லை என்று கூறியிருந்தார்.

நடிகர்கள் திருமணத்தில் நடனம் ஆடுவது குறித்து சொன்னது:

இப்படி இவர் கூறியிருந்ததற்கு காரணம், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் இந்திய நடிகர்களான சல்மான்கான், அக்ஷய்குமார் இணைந்து மேடையில் நடனமாடி இருந்தார்கள். இது சம்பந்தப்பட்ட வீடியோ கூட சோசியல் மீடியாவில் படு வைரலாகி இருந்தது. இதையெல்லாம் மனதில் வைத்து தான் கங்கனா பாலிவுட் நடிகர்களை விமர்சித்து கூறியிருந்ததாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கு கங்கனா தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement