பிரியாணி பிரியர்களுக்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் யூடியூபர் இர்ஃபான் பிரியாணி சாங் ஒன்றை பாட இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். முதலில் பொழுதுபோக்குக்காக youtubeபை தொடங்கியவர் இர்ஃபான். பின் நாளடைவில் சோறு தான் முக்கியம் என்பதை உணர்ந்து தனக்கு பிடித்தமான சாப்பாட்டை கன்டென்ட் ஆக எடுத்துக்கொண்டு வீடியோ போட்டிருந்தார்.
அதுவே மக்கள் மத்தியில் பிரபலமாகி ஹோட்டல்களுக்கு சென்று வீடியோ போட்டார். இதனால் இவர் தான் செய்திருந்த வேலையையும் விட்டு முழு நேர வேலையாகவே யூட்யூபை நடத்தி வருகிறார். இவர் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை குறித்தும், அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவு இடுவார். இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம். இவர் பல ஊர்களுக்கு சென்று பல ஓட்டல்களில் சாப்பிட்டு அதற்கான கருத்துக்களை போடுவார்.
யூடியூபர் இர்ஃபானின் யூடியூப் பயணம்:
அதோடு இவர் எப்போதும் அரை டவுசர் போட்டுக்கொண்டு தான் சந்து கடை முதல் வெளிநாடுகள் உள்ள காட்ஸ்லி ஹோட்டல் வரை சென்று உணவை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ போடுகிறார். இதன் மூலம் இவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது. பல பிரபலங்கள் இவரின் வீடியோவை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். அந்த வகையில் ஒருமுறை விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உலகநாயகன் கமலஹாசன் கூட இர்பானின் யூடியூப் வீடியோக்களை ரசித்து பார்ப்பேன் என்று கூறியிருந்தார்.
Otha… Engana poi oor oora othu thinnoma nu illama idhellam theva illadha vela da Sena panni unakku
— Sidhu (@Sidhu88407454) February 28, 2023
இர்பான் குறித்த தகவல்:
அந்த அளவிற்கு மிகப் பிரபலமான நபராக திகழ்கிறார் இர்பான். அதிலும் இவரின் பிரியாணி ரிவ்யூ வேற லெவலில் இருக்கும். பிரியாணி பிரியர்களுக்கு இவருடைய வீடியோ எல்லாம் பிரபலம் என்றே சொல்லலாம். அது மட்டுமில்லாமல் இவருடைய ஏராளமான ரெசிபிகள், ஹோட்டல்கள் என்று இவர் கால் வைக்காத இடமே இல்லை என்று சொல்லலாம். மேலும், இவர் இந்த இடத்திற்கு இவ்வளவு எளிதாக வரவில்லை. பல பிரச்சினைகள், விமர்சனங்களை தாண்டி தான் இவர் வந்திருக்கிறார்.
ஜிப்ரான் இசையில் இர்பான்:
தற்போது இவர் யூடியூப் செலிபிரிட்டியாக இருக்கிறார். இந்த நிலையில் இவர் பிரியாணி பிரியர்களுக்காக பாட்டு ஒன்றை பாட இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பிரியாணி பிரியர்களுக்காக யூடியூபர் இர்ப்பான் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இது குறித்து அவர் தன்னுடைய twitter பக்கத்திலும் தெரிவிக்கிறார்.
ஜிப்ரான் டீவ்ட்:
இது தொடர்பாக ஜிப்ரான் அவர்கள் டீவ்ட்டர் பக்கத்தில், யூடியூபர் இர்ப்பானுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, உங்களை பாட வைத்ததில் மிக்க மகிழ்ச்சி. விரைவில் பிரியாணி பிரியர்களுக்காக நாம் இருவரும் இணைந்து பிரியாணி பாடல் ஒன்றை டெடிகேட் செய்வோம் என்று பதிவிட்டு இருக்கிறார். இவரின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து இர்பான் குரலில் பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.