படத்தின் புரொமோஷனுக்காக என் நோயை பற்றி சொல்கிறேனா? சிம்பதி ஸ்டார் பட்டம் குறித்து சமந்தா பதிலடி.

0
147
samantha
- Advertisement -

மயோசிடிஸ் குறித்து பொதுவெளியில் சொல்ல இது தான் காரணம் என்று சமந்தா கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

சமீப காலமாக இவர் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். ஆனால், இறுதியாக இவர் லீட் ரோலில் நடித்த யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது. இதனால் சமந்தா அதிக வேதனையில் இருந்தார். கடைசியாக விஜய் தேவர்கொண்டாவுடன் இவர் நடித்த குஷி படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. சமந்தாவிற்கு இது ஒரு கம்பேக் படமாக அமைந்து இருந்தது.

- Advertisement -

மயோசிடிஸ் நோய்:

இது ஒருபுறம் இருக்க, கடந்த சில வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே. இது ஒரு வகையான தசைய அலர்ஜி நோய் என்று கூறப்படுகிறது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரண குணமடையவில்லை. இதனால் இவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார். அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக இருப்பதாக கடந்த ஆண்டு சமந்தா முடிவு எடுத்து இருந்தார்.

சிகிச்சைக்கு பின் சமந்தா:

பின் இவர் சிகிச்சை, மனநிம்மதிக்காக வெளிநாடு சுற்றுலா என்று இருந்தார். மேலும், பலரும் இவருடைய உடல் நலம் குறித்து ஆறுதலாக விசாரித்தாலும் சில பேர் படத்திற்காக சமந்தா சிம்பத்தி செய்கிறார், பொய் சொல்கிறார் என்றெல்லாம் கிண்டல் கேலி செய்து இருந்தார்கள். நீண்ட ஓய்வுக்கு பிறகு சமந்தா மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் உடல் நலம் சார்ந்த விழிப்புணரையும் ஏற்படுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் சமந்தா சொன்னது:

இந்த நிலையில் சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா, மயோடிசிஸ் நோயால் நான் பாதிக்கப்பட்டதை சொல்ல வேண்டிய கட்டாயம் அப்போது எனக்கு இருந்தது. அந்த சமயத்தில் நான் ஒரு பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படத்தில் நடித்திருந்தேன். அந்த படம் ரிலீஸ் ஆக வேண்டிய நேரத்தில் தான் நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தேன். படத்தின் வெற்றிக்காக ப்ரோமோஷனுக்காக என்னை தயாரிப்பாளர் வரவேண்டும் என்று சொன்னார். அதனால்தான் நான் பேட்டிக்கு ஒத்துக் கொண்டேன். அந்த நேரத்தில் நான் அதிகம் மருந்துகள் எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

விமர்சனம் குறித்து சொன்னது:

அதனால் அந்த பேட்டியில் என்னுடைய உடல் தோற்றம் எப்போதும் போல் இல்லை. அதனால் தான் மயோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து பொது வெளியில் சொல்ல வேண்டிய சூழலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் சிலர் என்னை சிம்பதி குயின் என்றெல்லாம் அழைத்தார்கள். ஒரு மனிதராக நடிகையாக பரிமாண வளர்ச்சி அடைந்திருக்கிறேன். என்னுடைய சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் என்னைப் பற்றி தவறாக பேசுவதையும், எழுதுவதையும் தேடிப் பார்ப்பேன். அதிலிருந்து சில விஷயங்களை நான் மாற்றிக் கொள்வேன். இப்போது நாம் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது அதை வெளிப்படுத்த ஒரு இடம் தேவை. அதை சோசியல் மீடியாவாக நான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement