தற்போது கொரோனா அச்சத்தால் உலக நாடுகள் முழுவதும் செய்வதறியாது ஸ்தம்பித்து போய்யுள்ளது. மற்ற நாடுகளை போல இந்தியாவிலும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் மற்ற நாடுகளை போல இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் சிலர் வெளியில் வந்து கொண்டு தான் இருக்கின்றனர், அந்த வகையில் சில சினிமா பிரபலங்களும் விதி மீறல்களை மீறி வெளியே வருகின்றனர்.
ஆனால், நடிகை சமந்தாவும் இந்த லிஸ்ட்டில் சேர்ந்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி தனது உடற்பயிற்சி வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அதிலும் தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் சமந்தா அடிக்கடி தனது செல்ல நாயுடன் நேரத்தை கழித்து வரும் புகைப்படங்களையும் தனது கணவனுடன் நேரத்தை செலவழித்து வரும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில், பைக்கில் மாஸ்க் கூட அணியாமல் தனது கணவருடன் வெளியில் செல்ல இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் சிலர் ஊரடங்கில் இப்படி வெளியில் போகலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் காரில் தனது நாய் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார் சமந்த.
இந்தியா முழுக்க கொரோனா பிரச்சனையால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சமந்தா போன்ற நடிகைகள் இப்படி ஊரடங்கை மீறுவது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் சமந்தா பதிவிட்டுள்ள இந்த பதிவுக்கு கீழ், ஊரடங்களில் வீட்டில் கொஞ்சம் பாதுகாப்பாக இருங்கள் என்று அன்பாக அறிவுறுத்து வருகின்றனர்.