மறுமணம் மற்றும் குழந்தை விஷயத்தில் சமந்தா எடுத்துள்ள முடிவு – வைரலாகும் தகவல் இதோ.

0
494
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளுக்கும் மேலாக முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. ஆனால், இவர் லீட் ரோலில் நடித்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை. அதிலும் குறிப்பாக இறுதியாக இவர் லீட் ரோலில் நடித்த யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது.

-விளம்பரம்-

அதற்கு பின் கடைசியாக விஜய் தேவர்கொண்டாவுடன் இவர் குஷி என்ற படத்தில் நடித்து இருந்தார். காதல் ஆக்ஷன் திரைப்படமாக உருவான இந்த திரைப்படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. இது சமந்தாவிற்கு ஒரு கம்பேக் படமாக அமைந்து இருந்தது. இதற்கு பின் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. காரணம், இவர் சிகிச்சை மற்றும் மன அமைதியை தேடி கொண்டு இருக்கிறார். கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே.

- Advertisement -

மயோசிடிஸ் நோய்:

இது ஒரு வகையான தசைய அலர்ஜி நோய் என்று கூறப்படுகிறது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரண குணமடையவில்லை. தற்போது அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருப்பதால் தான் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை சமந்தா திருப்பிக் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

samantha

மீண்டும் மருத்துவமனையில் சமந்தா:

தற்போது சமந்தா தீவிரமாக சிகிச்சை எடுத்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு மன நிம்மதிக்காக சமந்தா பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட அமெரிக்காவில் தன்னுடைய சிகிச்சையை தொடர்ந்து சமந்தா தற்போது தேறி இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தாகள். சில நாட்களுக்கு முன் கூட சமந்தா ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் சமந்தா இரண்டு குழந்தைகளை தத்து எடுக்க இருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமந்தா, நாக சைதன்யாவின் பிரிவிற்கு பிறகு இரண்டாம் திருமணத்தை பற்றி பேசுவதில்லை. அதுமட்டுமில்லாமல் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்றும் கூறியிருந்தார். ஆனால், தற்போது இவர் இரண்டு குழந்தைகளை வளர்க்க இருப்பதாக கூறப்படுகிறது.

Samantha

குழந்தைகளை தத்து எடுக்கும் சமந்தா:

பிரத்யுஷா சப்போர்ட் என்ற சேவை அமைப்பு இருக்கிறது. இது பல தரப்பட்ட நோய்களால் பாதிக்க பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்கள். இந்த அமைப்பில் பல பெண்கள் குழந்தைகள் ஆதரவு இல்லாமல் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமந்தா இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க இருப்பதாக இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தைகளை வளர்ப்பதில் தான் சமந்தா கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement