மேடையில் காலில் விழ போன சமந்தாவை பிரபலம் ஒருவர் உதாசினம்படுத்தி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் படு ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சமந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பின் இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது.
சமந்தா குறித்த தகவல்:
மேலும், பிரிவிற்கு பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சமீப காலமாக இவர் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். இறுதியாக இவர் லீட் ரோலில் நடித்த யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது. இதனால் சமந்தா அதிக வேதனையில் இருந்தார். கடைசியாக விஜய் தேவர்கொண்டாவுடன் இவர் நடித்த குஷி படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. சமந்தாவிற்கு இது ஒரு கம்பேக் படமாக அமைந்து இருந்தது.
மயோசிடிஸ் நோய்:
இது ஒருபுறம் இருக்க, கடந்த சில வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே. இது ஒரு வகையான தசைய அலர்ஜி நோய் என்று கூறப்படுகிறது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரண குணமடையவில்லை. பின் இவர் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக இருப்பதாக கடந்த ஆண்டு முடிவு எடுத்து இருந்தார். நீண்ட ஓய்வுக்கு பிறகு சமந்தா மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமந்தா வெப் தொடர்:
தற்போது இவர் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டியிருக்கிறார். அந்த வகையில் தற்போது சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் வெப் தொடர் Citatel Honey Bunny. இது ஒரு ஸ்பை த்ரில்லர் வகையிலான பாலிவுட் வெப் சீரிஸ். ஃபேமிலி மென் தொடரைத் தயாரித்த ராஜ் நிடமொரு மற்றும் கிருஷ்ணா டிகே தான் இந்தத் தொடரையும் தயாரித்து இருக்கிறது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக வருண் தவான் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் நேற்று நடந்த அமேசான் ப்ரைம் நிகழ்ச்சியில் சமந்தா கலந்து இருந்தார்.
Varun Dhawan and Samantha bend down to touch Karan Johar's feet at Prime Video announcement conference#VarunDhawan #KaranJohar #SamanthaRuthPrabhu #PrimeVideo #Citadel @Varun_dvn @Samanthaprabhu2 @PrimeVideoIN pic.twitter.com/ICOMEaFslY
— IWMBuzz (@iwmbuzz) March 19, 2024
சமந்தா செய்த செயல்:
இந்த நிகழ்ச்சியை ஹிந்தி இயக்குனர் கரன் ஜோகர் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். அதில் அவர் தான் நடித்த Citatel Honey Bunny சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய படத்தை அறிமுகப்படுத்துவதற்காக சமந்தா மேடைக்கு சென்று இருக்கிறார். அப்போது கரன் ஜோகர் காலில் வருண் விழுந்தார். அதற்கு அவர் ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தார். அதற்குப்பின் சமந்தா அவர் காலில் விழு என்ற போது அவர் நோ நோ என்று சொல்லி தள்ளி சென்று விட்டார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலருமே ஏன் கரண், சமந்தாவிடம் மட்டும் அப்படி நடந்து கொண்டார் என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.