மக்கள் நீதி மய்யம் பெயரே தப்பு, மய்யம்ன்னா என்ன அர்த்தம் தெரியுமா? பிரபல தமிழ் ஆசிரியர் தகவல்

0
373
- Advertisement -

விஜயை தொடர்ந்து கமலஹாசனின் கட்சியின் பெயரை விமர்சித்து தமிழாசிரியர் கதிரவன் ஆறுமுகம் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். பின் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற தொடங்கியது அனைவருக்கும் தெரிந்ததே. அதன் பின் இந்த இயக்கத்தின் சார்பில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.

-விளம்பரம்-

இதனால் விஜய் அவர்களை அழைத்து பாராட்டியும் இருந்தார். விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறது. இதன் சார்பாக மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்கள். சமீப காலமாக விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறி இருந்தார்கள். அதற்கு ஏற்ப விஜய் அரசியலில் களமிறங்கி இருக்கிறார்.

- Advertisement -

விஜய் அரசியல்:

இவர் தன்னுடைய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இதை தொடர்ந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதன் பின் நடந்த கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்றும் விஜய் சொல்லியிருக்கிறார். தற்போது தன் கட்சியில் உறுப்பினர் சேர்ப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்கள்.

விஜய் கட்சி பெயர் குறித்த சர்ச்சை:

இப்படி ஒரு நிலையில் விஜய் ஆரம்பித்துள்ள கட்சியின் பெயரில் பிழை இருப்பதாக பிரபல தமிழ் ஆசிரியர் கதிரவன் ஆறுமுகம் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டார். அதில் அவர், விஜய்யின் கட்சியின் பெயர் ‘தமிழக அவர் கழகம்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி என்ற சொல்லுக்கு பின்னால் ‘க்’ வர வேண்டும். எனவே ‘தமிழக வெற்றி கழகம்’ என்பதற்க்கு பதலாக ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று திருத்தம் செய்யுமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார். இதை அடுத்து பலரும் கட்சி பெயர் பிழை குறித்து கமெண்ட் போட்டு இருந்தார்கள். ஒருவழியாக பிழையை மாற்றி விட்டார்கள்.

-விளம்பரம்-

தமிழ் ஆசிரியர் கதிரவன் ஆறுமுகம் பேட்டி:

இந்த நிலையில் தமிழ் ஆசிரியர் கதிரவன் ஆறுமுகம் அவர்கள் கமலஹாசன் கட்சியின் பெயரை விமர்சித்து பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், கமலஹாசன் உடைய கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என்று சொல்கிறார்கள். மையம் என்றால் இப்படி தான் வரும். ஆனால், அவர் மய்யம் என்று வைத்திருக்கிறார். இந்த மய்யம் என்றால் பிணம் என்று அர்த்தம் என்று பேசி இருக்கிறார்.

நெட்டிசன்கள் கேள்வி:

இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாகவே, கமலஹாசன் அவர்கள் சிறந்த அறிவாளி, திறமைசாலி, நடிகன் என்று புகழ்பெற்றவர். கமல் தமிழில் அதிக ஆர்வம் கொண்டவர். தமிழுக்காக பல விஷயங்களை செய்திருக்கிறார். தமிழ் மொழியை மட்டும் இல்லாமல் பிற மொழிகளையும் பயின்று தேர்ந்தவர். இப்படிப்பட்டவர் தன்னுடைய கட்சிக்கு இந்தப் பெயர் வைத்ததற்கான காரணம் என்ன? எதையும் யோசிக்காமலா கமல் வைத்திருப்பார்? என்று நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.

Advertisement