ரீ-மேக் குறித்த கேள்வி, மகேஷ் பாபுவிடம் விஜய் குறித்து கிண்டலடித்து சமந்தா – வைரலாகும் வீடியோ

0
564
- Advertisement -

நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யை சமந்தா அவமானப் படுத்திருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், இவர் தளபதி விஜயுடன் இணைந்து மூன்று படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 69 படத்திலும் இவர் கமிட் ஆகி நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இப்படி இருக்கும் நிலையில் விஜய்யை நடிகை சமந்தா அவமானப்படுத்தி பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, தெலுங்கில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சி ஒன்றை சமந்தா தொகுத்து வழங்கியிருந்தார்.

- Advertisement -

சமந்தா வீடியோ:

அப்போது அவர் மகேஷ் பாபுவை பேட்டி எடுத்திருந்தார். அவரிடம், உங்களுக்கு எந்த மாதிரியான படங்கள் பிடிக்கும் என்று சமந்தா கேட்டிருக்கிறார். அதற்கு மகேஷ் பாபு, கத்தி போன்ற படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறினார். பின் சமந்தா, அதை நீங்கள் ரீமேக் செய்து நடிப்பீர்களா? என்று கேட்டிருக்கிறார். உடனே மகேஷ்பாபு, இல்லை. நான் ரீமேக் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறினார். இதை எடுத்து சமந்தா, நீங்கள் விஜய் உடைய படங்களை ரீமேக் செய்து நடிக்க மாட்டீர்கள்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

அதே சமயம் விஜய் உங்களுடைய படங்களை ரீமேக் செய்து நடிக்கிறார் என்று கிண்டலாக பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் கொந்தளித்து சமந்தாவை திட்டி வருகிறார்கள். இன்னும் சிலர், இது உண்மைதான். தேவை இல்லாமல் சர்ச்சையாக்க வேண்டாம் என்றும் கூறி வருகிறார்கள். மேலும், இறுதியாக இவர் லீட் ரோலில் நடித்த யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது.

-விளம்பரம்-

சமந்தா படங்கள்:

கடைசியாக விஜய் தேவர்கொண்டாவுடன் இவர் நடித்த குஷி படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. சமந்தாவிற்கு இது ஒரு கம்பேக் படமாக அமைந்து இருந்தது. இது ஒருபுறம் இருக்க, கடந்த இரண்டு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே. இது ஒரு வகையான தசைய அலர்ஜி நோய் என்று கூறப்படுகிறது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரண குணமடையவில்லை.

சமந்தா லேட்டஸ்ட் நியூஸ்:

அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது சமந்தா குணமாகி ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டியிருக்கிறார். சமீபத்தில் கூட ஃபெமினா இந்தியா புத்தகத்தின் அட்டைப் படத்திற்கு சமந்தா போஸ் கொடுத்திருக்கிறார். அதில் அவர் மிக கவர்ச்சியாகவும் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement