ரப்பர் ஸ்டாம்ப திருடிட்டாங்க – அதிமுகவில் இணைந்ததும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மன்சூர் அலிகான் பரபரப்பு குற்றச்சாட்டு.

0
174
- Advertisement -

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டதை அடுத்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் திமுக கட்சியுடன் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் இணைந்து இருக்கிறார். பின் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இணைந்து இருக்கிறார். இப்படி அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்தும், தீவிரமாக ஆலோசனைகளை நடத்தியும் வருகிறார்கள். மேலும், இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மன்சூர் அலிகான் அதிமுகவுடன் மக்களவைத் தேர்தல் கூட்டணி வைத்திருப்பதாக கூறப்பட்டது.

- Advertisement -

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி:

பின் இது தொடர்பாக தன்னுடைய இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் நிர்வாகிகளுடன் மன்சூர் அலிகான் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதனை அடுத்து நேற்று இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் அவசர செயற்கைக் குழு கூட்டம் சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் நடைபெற்றிருக்கிறது. இந்த கூட்டத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி இருப்பதாக கூறப்பட்டது. மேலும், இது குறித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

பொதுச்செயலாளர் கண்ணதாசன் அறிக்கை:

அதில் அவர், நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் சார்பில் கூட்டணி குறித்தான முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுசெயலாளர் கண்ணதாசனுக்கு தான் இருக்கிறது. பொது செயலாளர் தலைமையில் தான் தேர்தல் பரப்புரை ஈடுபடும் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி தேர்தல் பரப்புரை குழுவானது கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்.

-விளம்பரம்-

மன்சூர் அலிகான் அறிக்கை:

இந்த நிலையில் இது தொடர்பாக மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், கண்ணதாசன் பொதுச் செயலாளர் இல்லை. இந்திய ஜனநாயக புலிகள் என்ற இயக்கத்திற்கு பொதுச் செயலாளராக குன்றத்துரை சேர்ந்த பாலமுருகன் தான் இருக்கிறார். கண்ணதாசன் மூத்த சங்க உறுப்பினர். அவர் செல்ல பாண்டியனால் ஆபீஸ் பாயாக வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின் அவர் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்தவர்களை படம் பிடித்து கட்சியில் சேர்ந்தார்.

கண்ணதாசன் குறித்து சொன்னது:

அடிக்கடி என்னுடனும் வருவார். அண்ணா என்று என் பின்னாடி வந்து ஒட்டிக் கொள்வார். ஒரு முறை தமிழ்நாடு தமிழருக்கே என்று சட்டை அணிந்து வந்ததை கண்டித்தேன். ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டார். சமீபத்தில் கூட அலுவலக ரப்பர் ஸ்டாம்ப், 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் போன்றவற்றையெல்லாம் திருடி சென்றிருந்தார். பின் அவர் சேர்த்த உறுப்பினர்கள் எல்லாம் நீக்கி புதிய உறுப்பினர்களை கொண்டு மீள் மனு செய்து தேர்தல் ஆணையத்திலும் ஒப்புதல் வாங்கி விட்டோம். அவர் குறித்து யாருமே கவலை தெரிவிக்க வேண்டாம். தமிழரை வேலைக்கு இதனால் தான் யாரும் வைப்பதில்லை. நான் ஆரணி பெரம்பலூர் பகுதியில் ஆதரவு திரட்டி வருவதால் நிறைய வேலையில் இருக்கிறேன். உறுப்பினர்கள் யாரும் அவர் மீது கோபம் கொள்ள வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement