சினிமா பிரபலங்கள் பலர் நடிப்பை தாண்டி பல்வேறு பிசினஸ்கள் நடத்தி வருகிறார்கள். பல பிரபலங்கள் சொந்தமாகவே உணவகங்கள், அழகு சாதன பொருட்கள் என்று பல தொழில்களை தொடங்கி நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது நடிகை சமந்தா அவர்கள் புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே சில பிசினஸ்களை தொடங்கி நடத்தி வருகிறார். தற்போது ஜாய் எனப்படும் பெண்களுக்கான மாதவிடாய் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு பிராண்ட் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

இந்த புதிய பிராண்டை மகேஸ்வரி மூர்த்தி என்பவரும் நடிகை சமந்தாவும் இணைந்து தான் தொடங்கி இருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சமந்தா, என்னுடைய ஆரோக்கிய வாழ்க்கையில் மாதவிடாய் காலத்தில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் குறித்து நாம் எவ்வளவு குறைவாக தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதை நான் கவனித்தேன். மாதம் மாதம் நம் உடலோடு நேரடியாக தொடர்பில் இருக்கும் ஒரு பொருள் எதனால் தயாரிக்கப்படுகிறது? அது நம் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது? என்ற கேள்வியை நாம் கண்டிப்பாக கேட்க வேண்டும்.
சமந்தா புது பிசினஸ்:
ரசாயனங்களின் பாதிப்பை குறைத்து பெண்களின் சவுகரியத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரும் தயாரிப்புகளை உருவாக்க வேண்டும். அந்த நோக்கில் தான் ஜாய் என்ற நிறுவனத்தை தொடங்கினேன். இதனுடைய லட்சியமே பெண்களுடைய ஆரோக்கியமும் பாதுகாப்பும் தான். இதனால் தான் என்னை இதில் இணைய வைத்தது. வெறும் தயாரிப்புகளை தாண்டி ஆரோக்கியம் குறித்த ஒரு பெரிய உரையாடலை நாம் உருவாக்க விரும்புகிறோம்.

சமந்தா பேட்டி:
மாதவிடாய் சுழற்சியை புரிந்து கொள்வது, அது பெண்களின் ஆற்றலையும் மனநிலையும் அன்றாட வாழ்க்கையும் எப்படி பாதிக்கிறது என்பதை தெரிந்து கொள்வது, உடலுக்கு எதிராக செயல்படாமல் உடலின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேலை செய்வது போன்ற விஷயங்கள் எல்லாம் இன்னும் அதிக கவனத்தை பெற வேண்டும். இந்த நிறுவனம் மூலமாக இந்த விழிப்புணர்வு உலகம் எங்கும் உள்ள அனைத்து பெண்களுக்கும் கொண்டு சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறியிருக்கிறார்.

சமந்தா குறித்த தகவல்:
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சமந்தா அவர்கள் மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இவரே தயாரிக்கிறார். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இந்த படம் வருகிற 19ஆம் தேதி திரைக்கு வெளியாக இருக்கிறது.






