ஜீவனாம்சமாக 250 கோடி பெற்றதாக பரவிய செய்தி – சமந்தாவின் படு நக்கலான பதிலடி.

0
411
samantha
- Advertisement -

விவகாரத்துக்கு பின் நாக சைதன்யாவிடம் 250 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக பெற்றதாக வெளியாக செய்தி குறித்து சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக டாப் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். பின் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : தேசிய விருது வென்ற நடிப்பின் நாயகன் சூர்யா – தன் முதல் படம் முதல் மனைவி, பிள்ளைகள் வரை நன்றி சொல்லி வெளியிட்ட உருக்கமான அறிக்கை.

சமந்தா-நாக சைதன்யா பிரிவு:

மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால், இருவரும் விவாகரத்து குறித்த காரணத்தை தெரிவிக்கவே இல்லை. பின் இவர்கள் இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார்.

-விளம்பரம்-

சமந்தா நடித்த படங்கள்:

அதனை தொடர்ந்து விஜய் தேவர்கொண்டா நடிக்கும் படத்திலும் குத்தாட்டம் போட இருக்கிறார். பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தா நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் சமந்தாவுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் சாகுந்தலம், யசோதா, திரில்லர் கதை சமந்தா கொண்ட படம், ஹாலிவுட் படம், குஷி போன்ற பல படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

250 கோடி வாங்கினேனா ? :

இந்நிலையில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் தன் முன்னாள் கணவர் குறித்து நடிகை சமந்தா கூறி உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியில் காபி வித் கரன் நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்று இருந்தார். அப்போது அவரிடம் ஜீவனாம்சம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சமந்தா ‘ 250 கோடி ருபாய் ஜீவனாம்சம் வாங்கியதாக வந்த வதந்தியை பார்த்து மிகவும் வருந்தினேன். எப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் வருவார்கள், அவர்களிடம் என்னிடம் எதுவுமே இல்லை என காட்டுவதற்காக காத்திருந்தேன்’ என்று நக்கலாக கூறி இறுகுந்தார்.

நாக சைதன்யா குறித்து சமந்தா சொன்னது:

அதே போல இந்த நிகழ்ச்சியில் சமந்தாவிடம் அதிகம் அவருடைய முன்னாள் கணவர் குறித்த கேள்வி தான் கேட்டிருந்தது. அதில் ஒரு கேள்விக்கு சமந்தா கூறியிருந்தது, எங்கள் இருவரையும் ஒரு அறையில் அடைத்து வைக்க வேண்டும். ஆனால், அங்கு மிகவும் கூர்மையான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது என்று பேசி இருந்தார். இப்படி இவர் கூறியதன் மூலம் நாக சைதன்யா மீது சமந்தா எவ்வளவு கோபத்தில் இருக்கிறார் என்பது தெரிகிறது. அதோடு இவர்கள் இருவருக்கும் மிகப் பெரிய சண்டை நடந்து இருப்பது தெரிகிறது.

Advertisement