அப்பா தான் வில்லன், மகன் பக்கா ஹீரோ மெட்டீரியல் – சினிமாவில் களமிறங்கிய பிரபல நடிகரின் மகன்.

0
1136
- Advertisement -

சரண் ராஜின் மகன் சினிமாவில் நடிக்க இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்தியா சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் சரண்ராஜ். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் ஆவார். இவர் 1987 ஆம் ஆண்டு தமிழில் வெளியான நீதிக்கு தண்டனை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் மொழியில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும் பின்னர் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக, கன்னட மொழியில் இவர் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். தமிழில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தர்மதுரை, பாட்ஷா, பாண்டியன், வீரா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ஜென்டில்மேன் படத்திலும் போலீசாக நடித்திருப்பார் சரண்ராஜ்.

சரண்ராஜ் இயக்கும் படம்:

மேலும், தமிழில் இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. பின் இவர் பிற மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். இப்படி இவர் கிட்டத்தட்ட 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவருடைய மகன் கதாநாயகனாக நடிக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் சரண்ராஜ் அவர்கள் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

குப்பன் படம்:

இவர் இயக்கும் படத்தில் இவருடைய மகன் தான் ஹீரோவாக நடிக்கிறார். இவர் இயக்கும் படத்திற்கு குப்பன் என்று டைட்டில் வைத்திருக்கிறார். கதை, திரைப்பட வசனம் எல்லாத்தையும் சரண்ராஜ் எழுதி இருக்கிறார். சோனி ஸ்ரீ ப்ரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இவருடைய இரண்டாவது மகன் தேவ் தான் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தில் இவருடன் சுஷ்மிதா சுரேஷ், பிரியதர்ஷினி அருணாச்சலம் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

சரண்ராஜ் மகன் குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் சரண்ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சரண்ராஜின் மகன் குப்பத்து மீனவ இளைஞராக இருந்து கொண்டு மார்வாடி பெண்ணை காதலிப்பது போன்ற கதை என்று கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் சமீபத்தில் சரண் ராஜனுடைய மகன் போட்டோ சூட்டும் நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதை பார்ப்பதற்கு அவர் அப்பாவை விட வேற லெவலில் பயங்கரமாக இருக்கிறார் என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.

Advertisement