சர்ச்சை கருத்து, முடுக்கப்ட ட்விட்டர் கணக்கு, சகோதரிக்கு ஆதரவு தெரிவித்த கங்கனா மீதும் வழக்கு.

0
1114
kangana-Ranavat
- Advertisement -

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கங்கனா ரனாவத். 2006-ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளி வந்த திரைப்படம் ‘கேங்க்ஸ்டர்’. இந்த படத்தினை இயக்குநர் அனுராக் பாசு இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக இம்ரான் ஹாஸ்மி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இது தான் கங்கனா ரனாவத் ஹிந்தியில் அறிமுகமான முதல் திரைப்படமாம்.

-விளம்பரம்-
Kangana Ranaut's sister

இதனைத் தொடர்ந்து ‘வொஹ் லம்கே, ஷக்கலக்க பூம் பூம், லைஃப் இன் எ.. மெட்ரோ’ போன்ற ஹிந்தி படங்களில் நடித்தார் கங்கனா ரனாவத். அதன் பிறகு ஹிந்தி திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை கங்கனா ரனாவத், தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார்.

- Advertisement -

2008-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளி வந்த திரைப்படம் ‘தாம் தூம்’. இது தான் நடிகை கங்கனா ரனாவத் தமிழ் சினிமாவில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். இதில் ஹீரோவாக ‘ஜெயம்’ ரவி நடித்திருந்தார். இப்போது ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’ என்ற தமிழ் படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் கங்கனா ரனாவத்.

நடிகை கங்கனா ரனாவத்திற்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சான்டெல் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் மொரதாபாத்தில் நடந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பாக போட்ட ஸ்டேட்டஸில் மத வெறுப்பை தூண்டுவது போல் பதிவிட்டிருந்தார் என்று கூறி மிகப் பெரிய சர்ச்சையானது.

Rangoli Chandel twitter account suspended: Twitter suspends ...

இதனைத் தொடர்ந்து ரங்கோலி சான்டெலின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாம். இது தொடர்பாக கங்கனா ரனாவத் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரங்கோலி சான்டெலுக்கு ஆதரவாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். இப்போது இந்த வீடியோ வைரலானதை அடுத்து மும்பையில் அலி காஷிஃப்கான் தேஷ்முக் என்ற வழக்கறிஞர் “தனது புகழை தவறாக பயன்படுத்தி நாட்டில் வன்முறையை தூண்ட முயல்கிறார்” என்று நடிகை கங்கனா ரனாவத் மீது போலீஸில் புகார் கொடுத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

Advertisement