நயனுடன் நடிக்க ஒப்புக்கொண்ட காரணம் என்ன ? ஓப்பனாக கூறிய சமந்தா.

0
21779
nayansammu
- Advertisement -

தமிழ், தெலுங்கு சினிமா உலகில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். சில வருடங்களாகவே சமந்தா அவர்கள் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது நடிகை சமந்தா அவர்கள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக நயன்தாராவும் நடிக்க உள்ளார். மேலும், விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்திற்காக விஜய் சேதுபதி உடல் எடையை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதையும் பாருங்க : ஓவராக வாயாடி வந்த ஸ்ரீரெட்டிக்கு ஆப்பு வைத்த காமெடி நடிகர்.

விஜய் சேதுபதி–நயன் ஜோடி மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு வேடிக்கையான ரொமான்டிக் திரைப்படம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தென்னிந்தியாவிலும் அதை சுற்றி உள்ள இடத்திலும் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது குறித்து நடிகை சமந்தா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியது, என்னிடம் விக்னேஷ் சிவன் கதை சொல்லிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் தான் நான் ஒத்துக் கொண்டேன். அதே போல் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடிப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இவர்களுடன் என்னுடைய திறமையை வெளிப்படுத்த முடியும் என்பதற்காகத் தான் இந்தப் படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன் என்று சமந்தா தெரிவித்து உள்ளார்.

Advertisement