என்னை பிடிக்காதவங்க நிறைய பேர் இருக்காங்க – Social Media விமர்சங்களுக்கு Skவின் எமோஷனல் பதில்.

0
243
sk
- Advertisement -

நெட்டிசன்கள் விமர்சித்து வருவதற்கு சிவகார்த்திகேயன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதேபோல் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் எல்லாம் வெளியாகி இருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ப்ரின்ஸ்.

- Advertisement -

ப்ரின்ஸ் படம்:

டாக்டர், டான் போன்ற படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் படம் சில தினங்களுக்கு வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் சத்யராஜ், மரியா, பிரேம்ஜி, சூரி,ஆனந்த்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தில் சத்யராஜ் தன் குடும்பத்துடன் பாண்டிசேரியில் வசித்து வருகிறார். இவர் ஜாதி, மதம் என அடித்துக் கொள்ளும் மக்கள் மத்தியில் அதெல்லாம் தேவையில்லாத ஒன்று. மனிதம் தான் முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார்.

படத்தின் கதை:

சத்யராஜின் மகனாக இருக்கும் சிவகார்த்திகேயன் பள்ளியில் வாத்தியாராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் கதாநாயகி மரியாவை (ஜெசிகா) சிவகார்த்திகேயன் காதலிக்கிறார். பின் இருவரும் காதலிக்க தொடங்கியவுடன் சிவகார்த்திகேயன் தன் தந்தை சத்யராஜ் இடம் காதல் குறித்து கூறுகிறார். ஆனால், தன்னுடைய மகன் காதலிக்கும் பெண் ஒரு பிரிட்டிஷ் பெண் என்று தெரிந்தவுடன் சத்யராஜ் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதேபோல் ஜெசிகாவின் தந்தையும் இந்த காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

-விளம்பரம்-

படம் குறித்த விமர்சனம்:

இந்த அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து தன்னுடைய காதலி ஜெசிக்காவை சிவகார்த்திகேயன் திருமணம் செய்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை. வழக்கமான காதல் கதை என்பதால் படம் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படவில்லை. மேலும், படம் குறித்தும், சிவகார்த்திகேயன் குறித்தும் நெட்டிசன்கள் விமர்சித்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் வீடியோ ஒன்றை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சிவா அளித்த பேட்டி:

அதில் சிவகார்த்திகேயன் அவர்கள், நிறைய பேர் கேலி செய்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. இப்போது நான் அதை கண்டு கொள்வதில்லை. அது மட்டும் இல்லாமல் இப்போதும் சமூக வலைத்தளங்களில் என்னை மட்டும் இல்லாமல் என்னுடைய குடும்பத்தை பற்றியும் விமர்சித்து தான் வருகிறார்கள் என்று கூறியிருந்தார்.

Advertisement