‘பிரிவால் வாடிய சமந்தா’ லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி புகைப்படம் இதோ.

0
502
samantha
- Advertisement -

என் குழந்தையை பிரிந்து தவிக்கிறேன் என்று சமந்தா பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது குறித்து சோசியல் மீடியாவில் பல வதந்திகளும் சர்ச்சைகளும் கிளம்பி இருந்து. இது குறித்து இரு தரப்பினரும் தெளிவான விளக்கம் போட்டிருந்தார்கள்.

-விளம்பரம்-
சமந்தா

இதனால் மன அழுத்தம் அதிகம் ஏற்பட்டதால் சமந்தா அவர்கள் ஆன்மீக சுற்றுப்பயணம் சென்று இருந்தார். அப்போது தான் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். மேலும், சமீபத்தில் தான் சமந்தா வீடு திரும்பினார். அதோடு பிரிவிற்கு பிறகு சமந்தா அவர்கள் பல படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் சோசியல் மீடியாவில் கூறப்படுகிறது. இதனிடையே சென்னையில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சமந்தா வந்திருக்கிறார்.

இதையும் பாருங்க : மாரியம்மாவா இது’ – திறந்துவிட்ட பட்டன், சட்டையை ஒரு பக்கம் இறக்கி சார்பட்டா நடிகை கொடுத்த போஸ்.

- Advertisement -

ஆனால்,பருவ மழையின் காரணமாக சென்னையில் சில தினங்களாகவே மழை பெய்து வருவதால் சமந்தா தன் வீட்டுக்கு செல்ல முடியாமல் சிக்கி தவித்து உள்ளார். இந்நிலையில் சமந்தா அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதில் ஒன்று மழை சூழ்ந்த சுற்றுப்புறத்தின் ஒரு காட்சி. இன்னொன்று ஹைதராபாத்தில் உள்ள தனது நாய்களுக்கான ஹாஷ் மற்றும் சாஷாவின் புகைப்படம். இந்த இரண்டு புகைப்படங்களையும் பதிவிட்டு சமந்தா அவர்கள் கூறி இருப்பது, நான் ஒரு நாள் இல்லை.

எனது சோகமான முதல் குழந்தை ஹாஷ். ஹாஷ் தனது சகோதரி சாஷாவை விட சோகமாக இருக்கிறது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். அவர்கள் தங்களுடைய அம்மாவை சென்னையில் நீண்ட நாட்களாக தங்க விடமாட்டார்கள் போல் தெரிகிறது என்று சமந்தா பதிவிட்டிருக்கிறார். நாய்களை தனது பிள்ளையாக கருதி சமந்தாவின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் பலவிதமாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement