தன் திரை வாழ்க்கையில் முதன் முறையாக ஐட்டம் பாடலில் ஆடப்போகும் சமந்தா – அதுவும் யார் படத்தில் பாருங்க. (சம்பளம் எவ்ளோ தெரியுமா)

0
629
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தன் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்து இருந்தார். விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னர் நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும், முதன் முறையாக பாலிவுட் படத்தில் கூட நடிக்கப்போவதாக கூட கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா, முதன் முறையாக ஐட்டம் பாடல் ஒன்றில் நடனமாட இருக்கிறார்.

-விளம்பரம்-

தெலுங்கு சினிமா உலகில் ஸ்டைலிஷ் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருப்பவர் அல்லு அர்ஜுன். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புஷ்பா. இந்த படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. மேலும், இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. படத்தில் அல்லு அர்ஜுன் அவர்கள் லாரி டிரைவராக நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கிறார்.

- Advertisement -

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளிவர உள்ளது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் எல்லாம் செம வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் சமந்தா , முதல் பாடலுக்கு நடனமாட இருக்கிறார்.

Pushpa: The Rise song Saami Saami will make you groove | Entertainment  News,The Indian Express

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது. இத்தனை ஆண்டு திரை வாழ்க்கையில் நடிகை சமந்தா எந்த ஒரு படத்திலும் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியது இல்லை. மேலும், இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை சமந்தா 1.5 கோடிகள் சம்பளம் பெற்றதாவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement