கடந்த நான்கு, ஐந்து மாதங்களுக்கு மேலாக உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரே ஒரு விஷயம் இந்த கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை இன்னும் சில நாட்களுக்கு நீட்டித்து உள்ளார்கள்.
இந்தியாவை பொறுத்த வரை ஆரம்பத்தில் இருந்த கொரோனாவின் தாக்கம் தற்போது தலை விரித்து ஆடுகிறது. இதனால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நபர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். மேலும், பல்வேறு சினிமா பிரபலங்களும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார்கள். அதிலும் நடிகர் சோனு சோத் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார்.
மஹாராஷ்டிரா மற்றும் தானேவில் இருந்து புறப்பட 10 சொகுசு பேருந்துகளை இலவசமாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது 6 மாடி கொண்ட ஹோட்டலை, ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். சமீபத்தில் ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி நாகேஸ்வரராவ். தனக்கு சொந்தமான நிலத்தில் தக்காளி பயிரிட முடிவு செய்தார்.
ஆனால், கையில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் நிலத்தை உழுவதற்கு மாடு, கலப்பை ஆகியவற்றுடன் கூடியவரை வரவழைத்தால் கொடுக்க அவரிடம் பணம் இல்லை.வேறு வழி இல்லாத நிலையில் தன்னுடைய இரண்டு மகள்களையும் மாடுகள் போல் பயன்படுத்தி நிலத்தை சீர் செய்தார் அந்த விவசாயி. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, இதனை பார்த்த பாலிவுட் நடிகர் சோனு சூட் நாளைக்குள் அந்த விவசாயிக்கு மாடுகளுக்கு பதிலாக ட்ராக்டர் நாளை காலையில் சென்றடையும்’என்று பதிவிட்டுள்ளார்.