ஷூட்டிங்கில் கெட்ட வார்த்தையில் மோசமாக திட்டிய வனிதா- மேடையில் சொன்ன சமுத்திரகனி

0
318
- Advertisement -

நடிகர் சமுத்திரகனியை கெட்ட வார்த்தையால் நடிகை வனிதா திட்டி பேசி இருந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக ஜொலித்து இருந்தவர் பிரசாந்த். இவர் பிரபல இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். கடந்த சில வாரங்களாகவே அந்தகன் படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது பிரசாந்த் அவர்கள் அந்தகன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, ஊர்வசி, வனிதா விஜயகுமார், லீலா சாம்சன், மனோபாலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கி இருக்கிறார். இந்த படம் ஹிந்தியில் ஆயூஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக் ஆகும். மேலும், இந்த படம் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

அந்தகன் படம்:

இதனால் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தினுடைய பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்திருக்கிறது. இந்த விழாவில் படக்குழுவினர் உட்பட பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் சமுத்திரகனி, நான் தியாகராஜன் உடைய தீவிர ரசிகன். நான் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் தியேட்டரில் ஆப்பரேட்டராக பணிபுரிந்த போது மலையூர் மம்முட்டியான் படத்தை அதிகம் போட்டு போட்டு பார்த்து ரசித்தேன்.

நிகழ்ச்சியில் சமுத்திரகனி சொன்னது:

எனக்கு அவர் மீது எப்போதுமே ஒரு பயம் இருக்கும். ஒரு நாள் திடீரென்று நண்பர் ஒருவர் மூலம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தியாகராஜன் சார் பேசினார். உடனே நான், நேரில் வரட்டுமா? என்று கேட்டேன். அதற்கு பிறகு அவர் விஷயத்தை சொன்னார். படத்தில் நடிப்பது தொடர்பாக என்னை அழைத்தார். உடனடியாக நான் சம்மதமும் தெரிவித்தேன். அன்றிலிருந்து பிரசாந்துடன் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. நாங்கள் இருவருமே ஐயா என்று தான் அழைத்துக் கொள்வோம்.

-விளம்பரம்-

வனிதா குறித்து சொன்னது:

மேலும், இந்த படத்தினுடைய படப்பிடிப்பில் ஒரு நாள், வனிதா கெட்ட கெட்ட வார்த்தைகளால் சராமரியாக என்னை திட்டி இருந்தார். என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இதை நான் தியாகராஜனிடம், ஏன் இப்படி வனிதா என்னை திட்டுகிறார்? என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே நான், காட்சிக்காக தான் கொஞ்சம் அவரை திட்டு என்று சொன்னேன். ஆனால், அவர் வாய்க்கு வந்தபடியெல்லாம் கெட்ட வார்த்தைகளால் பேசுகிறார். எப்படி எல்லாம் பேச வேண்டுமோ, அப்படி எல்லாம் பேசி முடித்து விட்டார். காது கொடுத்து அந்த வார்த்தைகளை கேட்க முடியவில்லை என்று சொன்னார்.

வனிதா சொன்ன விஷயம்:

உடனே இதைக் கேட்டு மேடையில் இருந்த எல்லோருமே சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதற்குப் பின் யாரை நினைத்து திட்டினார்கள் என்று அங்கிருந்தவர்கள் கேட்டதற்கு வனிதா, என் அப்பாவை மனதில் வைத்துக் கொண்டு தான் திட்டினேன். என் மனதில் என்னென்ன தோன்றியதோ எல்லாத்தையும் திட்டி தீர்த்து விட்டேன். என்னுடைய தந்தையும் அந்த அளவுக்கு நடிப்போடு ஒன்றி போய்விடுவார். அவர் தான் எனக்கு முன்மாதிரி என்று கூறியிருந்தார். இப்படி இவர்கள் பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement