இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது, நீங்க செய்ய வேண்டியது இதான் – ஞானவேல் மன்னிப்பு குறித்து சமுத்திரக்கனி காட்டம்

0
405
- Advertisement -

ஞானவேல் ராஜாவின் மன்னிப்பு அறிக்கையை விமர்சித்து சமுத்திரக்கனி கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே அமீர்-ஞானவேல் ராஜா தான். சமீபத்தில் பேட்டியில் அமீர், ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அதனால் நானும் போகவில்லை. பருத்திவீரன் படத்தின் வெற்றியால் தான் கார்த்திக் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சிவக்குமார், சூர்யா, கார்த்திக் குடும்பத்துடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் எங்களுடைய நட்பை கெடுத்து விட்டார். அவரால் எனக்கு இரண்டு கோடிக்கும் மேல் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் காரணம். அவரிடம் எனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து பேசியும் நீதி கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார். இதனை அடுத்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர் என்னிடம் பல லட்சங்கள் கடன் வாங்கி இருக்கிறார். அதனை கொடுக்க முடியாமல் தான் பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அவர் இயக்கி கொடுப்பதாக சொன்னார்.

- Advertisement -

பருத்திவீரன் சர்ச்சை:

சுமார் 2 கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காபி தருவதாக சொல்லிவிட்டு இரண்டு வருடங்களில் 4 கோடி வரை செலவு செய்தார். என்னை மட்டும் இல்லாமல் இன்னும் சில தயாரிப்பாளர்களிடமும் பணம் வாங்கிக் கொண்டு அமீர் மோசடி செய்து இருக்கிறார். அமீர் ஒரு திருடன் என்று விமர்சித்து கூறியிருக்கிறார். தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இந்த விவகாரம் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மேலும், ஞானவேல் ராஜாவை விமர்சித்து இயக்குனர் சமுத்திரக்கனி, சசிகுமார், சுதா, பொன்வண்ணன், சினேகன், பழனியப்பன், பாரதிராஜா என பல பிரபலங்கள் கடுமையாக கண்டித்து பேசி இருந்தார்கள்.

ஞானவேல் ராஜா மன்னிப்பு அறிக்கை:

இப்படி கோலிவுட் வட்டாரத்திலேயே அமீரின் விவகாரம் பயங்கர பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கார்த்திக், சூர்யா இருவருமே அமைதி காப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இப்படி அனைவருமே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக திரும்பி உடன் ஞானவேல் அமீரிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில், பருத்திவீரன் ஒன்றை பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்துகொண்டு இருகிறது. இதுநாள் வரை அதை பற்றி நான் பேசியது கிடையாது. என்றைக்குமே அவரை நான் அமீர் அண்ணா என்று தான் அழைப்பேன்.

-விளம்பரம்-

அமீர் குறித்து சொன்னது:

ஆரம்பித்தில் இருந்தே அவர் குடும்பத்தினருடன் அழைப்பேன். பழகி இருக்கிறேன். சமீபத்திய பேட்டிகளில் என்ன குறித்து அவர் கூறிய பொய்யான குற்றசாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.அதற்கு பதிலளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அமீர் அண்ணன் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான் என்று கூறி இருக்கிறார்.

சமுத்திரக்கனி காட்டம் :

இப்படி ஒரு நிலையில்  ஞானவேலின் வருத்தத்தை ஏற்க மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குனர் சமுத்திரக்கனி ‘பிரதர்… இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது… நீங்க செய்ய வேண்டியது, எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ. அதே பொது வெளியில் பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும். நீங்க கொடுத்த அந்தக் கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்..!

அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா… கடனா வாங்குன நிறைய பேருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு. அப்புறம் ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்… அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க… நீங்கதான், ‘அம்பானி பேமிலியாச்சே..!’ காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி!’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement