மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழாவில் சமுத்திரகனி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த 2ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 6 வரை நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமுத்திரகனி, என் அப்பா காந்தியவாதி. என் மாமா கம்யூனிஸ்ட். என் அப்பாவை பார்த்தால் எல்லாரும் பேசுவாங்க. ஆனால், என் மாமாவை பார்த்தால் தான் மரியாதை கொடுப்பார்கள். அது எனக்கு ரொம்ப புடிக்கும். நான் கல்லூரி முடித்த உடனே சென்னை வந்தேன். அப்போது நிறைய கம்யூனிஸ்ட் தோழர்களை சந்தித்தேன். எங்கள் இயக்குனர் வெற்றிமாறன் சாரை பார்க்கும்போது ஒரு சிவப்பு சிந்தனை வரும்.
கம்யூனிஸ்ட் கட்சி விழா:
'தறியுடன்' என்ற ஒரு நாவல். அதனை சாருடைய சாரின் உதவி இயக்குனர் ஒருவர் 'சங்கத் தலைவன்' என்ற தலைப்பில் படமாக இயக்கியிருந்தார். அதனை வெற்றிமாறன் சார் தான் தயாரித்தார். தறி தொழிலாளர்களின் பிரச்சனையை மையமாக வைத்து அந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. அதற்குப்பின் விசாரணை, வடசென்னை போன்ற படங்கள் மூலம் என்னை ஒரு வேறு தளத்திற்கு கொண்டு சென்றார். ஒரு நாள் 'காவல் கோட்டம்' என்ற நாவலை படித்து வியந்து போனேன். அந்த எழுத்தாளரை சந்தித்தும் பேசினேன்.
https://www.youtube.com/watch?v=7WxB1jjcNUU
சமுத்திரக்கனி சொன்னது:
அதன் மூலம் நான் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. இப்படி என்னை சுற்றி இருக்கும் நிறைய பேர் என்னுடைய கைகளைப் பிடித்து இந்த சிந்தனையுடனே நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள். எங்கள் துறையில் சிவப்பு சிந்தனையுடன் இருக்கும் இயக்குனர்களை பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன் ' என்று திருமூலர் சொன்னார். அவர் தான் முதல் கம்யூனிஸ்ட்.
கம்யூனிஸ்ட் விளக்கம்:
வர்த்தகத்தை ஒழிப்பது, சமூக ஏற்றத்தாழ்வுகளை சமமாக்குவது தான் ஒரு கம்யூனிச தத்துவம். கம்யூனிஸ்ட் என்றால் பொதுவுடமைவாதி. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவன் தான் உண்மையான கம்யூனிஸ்ட். உலகத்தில் எங்கு யார் சிவப்பு சட்டை அணிந்து வந்தாலுமே ஒரு எளிய மனிதர் வருகிறார், அவரிடம் நாம் பேசலாம் என நினைக்கும் அளவிற்கு நம்பிக்கை பிறக்கும். அதே போல் எனக்கு சின்ன வயதில் இருந்தே சிவப்பு என்றால் ஆசை.

கடவுள் பற்றி சொன்னது:
அப்படி என்றால் கடவுளே கம்யூனிஸ்ட் தான். எந்த ஏற்றத்தாழ்வுகளையும் அவர் பார்ப்பதே கிடையாது. சிவப்பு கலரை பார்த்தால் ஒரு பீதி இருக்கும். ஒரு இடத்தில் சத்தமாக பேச வேண்டும் என்றால் எனக்கு சிவப்பு சட்டை போட்டுக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். வலது, இடது என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. தீயில் நல்ல தீ, கெட்ட தீ என்றும் கிடையாது. தீ என்றாலே அது தீதான். ஒன்று சேர்வோம் நல்ல மாற்றத்தை கொண்டு வருவோம் என்று கூறியிருக்கிறார்.






