தன்னுடைய சினிமா பயணம் குறித்து சமுத்திரக்கனி கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமுத்திரகனி. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

அதை அடுத்து இவர் விஜயகாந்தை வைத்து நிறைந்த மனசு, சசிகுமாரின் நாடோடிகள், போராளி, ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, வினோதய சித்தம் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் இவர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் நடிகராகவும் மாறினார். அதைத்தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார்.
சமுத்திரக்கனி திரைப்பயணம்:
சமீபத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகி இருந்த யாவரும் வல்லவரே படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து சமுத்திரக்கனி நடித்து உள்ள படம் ராமம் ராகவம். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் அப்பா – மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதை. இதை அடுத்து தற்போது இவர் அறிமுக இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் திரு.மாணிக்கம்.

சமுத்திரக்கனி படம்:
இந்த படத்தில் நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று இருந்தது. இதில் பட குழுவினருடன் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் நாயகன் சமுத்திரகனி,
நான் முதன் முதலில் சீரியலில் தான் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கப் போனேன்.

விழாவில் சமுத்திரக்கனி:
அப்போது நான் ரொம்ப ஒல்லியாக இருந்தேன். என்னை பார்த்து இயக்குனர் என்ன நெனச்சாருன்னு தெரியவில்லை. பக்கத்தில் இருந்த ஒருவரை கூப்பிட்டு, அவன உதைக்கிற மாதிரி ஒரு சீன் இருக்கு. நீ அவன உதைக்கிற உதையில அவன் போய் வெளியே விழனும். அதற்குப் பிறகு அவனுக்கு சினிமா ஆசையே வரக்கூடாது. சினிமாவை நினைச்சே பார்க்க கூடாது என்று சொன்னார். அந்த சீனில் நான் பலமுறை பயங்கரமாக அடி வாங்கினேன். ஆனால், சினிமா கனவை ஒருபோதும் விடவில்லை.
https://www.youtube.com/watch?v=ploDULUI81k
சினிமா பயணம் குறித்து சொன்னது:
அதற்குப்பின் அந்த இயக்குனர் இடமே நான் வேலை பார்த்தேன். அவர் என்னை விடவே இல்லை. என்னை உதைத்த அந்த நடிகர் இன்னும் இருக்கிறார். இப்பவும் என்னை பார்த்தால் மன்னிப்பு கேட்பார். அன்றைக்கு உதைத்த அந்த உதையினால் தான் இன்றைக்கு இங்கு வந்து விழுந்திருக்கிறேன். பல கட்டங்களை கடந்து தான் இப்போ நடிகராக, இயக்குனராக நின்று இருக்கிறேன். நேர்மையும், உழைப்பையும் நம்பி மட்டும்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.






