தான் வரைந்த விஜய் ஓவியத்தை கேலி செய்த விஜய் ரசிகர்களுக்கு சனம் ஷெட்டி கொடுத்த பதிலடி.

0
1446
Sanam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமானவர் சனம் ஷெட்டி. இவர் பிக் பாஸுக்கு முன்பாக பல படங்களில் நடித்து இருந்தாலும் இவரது பெயர் பிரபலமானது என்னவோ பிக் பாஸ் சீசன் 3ல் தர்ஷன் கலந்துகொண்ட போது தான். தர்ஷனுக்கு சனம் ஷெட்டி என்ற காதலி இருக்கிறார் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் சென்ற சில நாட்களிலேயே தெரியவந்தது.சனம் ஷெட்டிக்கும் தர்ஷனுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் கூட முடிந்து விட்டது. ஆனால், தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டார் என்று சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

சனம் ஷெட்டியின் வாழ்த்து :

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சனம் செட்டி அடிக்கடி ஏதாவது பதிவுகளை போடுவது வழக்கம். அதேபோல முக்கிய பிரபலங்களில் பிறந்தநாளுக்கு தவறாமல் தன்னுடைய பிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து விடுவார். அந்த வகையில்நேற்று பிறந்தநாள் கண்ட விஜய்க்கு வாழ்த்து சொல்லும் விதமாக அவருடைய உருவத்தை தன்னுடைய கையால் வரைந்து அதனை வீடியோவாக வெளியிட்டு சனம் ஷெட்டி வெளியிட்டு இருக்கும் பதிவு தற்போது கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.

- Advertisement -

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு திரை நட்சத்திரங்களும் அவருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சனம் செட்டி விஜய்யின் உருவத்தை வரைந்து அதனை வீடியோவாக பதிவிட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். மேலும், அந்த பதிவில் பல்வேறு ஹெஸ் டேக்களுடன் #leosecondlook என்ற ஹெஸ் டேக்கையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

கலாய்க்கும் ரசிகர்கள் :

சனம் செட்டியின் இந்த பதிவை கண்ட விஜய் ரசிகர்கள் பலர் சனம் செட்டிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலானோர் விஜயை ஏன் இப்படி அசிங்கப்படுத்தி இருக்கிறீர்கள், தயவு செய்து இதை டெலிட் செய்யுங்கள், இன்னொரு முறை பென்சிலை கையில் எடுக்காதீர்கள் என்று கூறி வருகிறார்கள். அதேபோல இதனை எவ்வளவு தைரியம் இருந்தால் லியோ செகண்ட் லுக் என்று சொல்வீர்கள் என்றும் சனம் சிட்டியை கலாய்த்து வந்தனர்.

-விளம்பரம்-

சனம் பதிலடி :

இப்படி ஒரு நிலையில் விஜய் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள சனம் ஷெட்டி ‘ என்ன மக்களே ஒரு ஸ்கெட்சுக்கே இவ்வளவு ரியாக்ஷனா, வைரல் ஆக்கிட்டீங்களே. ஆனா, விஜய் சார் ரசிகையா இருந்து இந்த ட்ரோல்ஸ்க்கு எல்லாம் கவலைப்பட மாட்டேன். விஜய் எதிர்கொண்ட விஷயத்திற்கு முன்னாள் இதெல்லாம் ஒன்றுமே கிடையாது. அனைத்து கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது. அதனால் அடுத்த ஸ்கெட்ச் வரை சில் பண்ணுங்க. இருப்பினும் என்னுடைய முயற்சியை பாராட்டியவர்களுக்கு நன்றி ‘ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement