ஈஷா கூட்டத்தால் கொரோனா பரவியதா ? சத்குருவை சரமாரி கேள்வி கேட்ட சந்தானம்.

0
2211
santhanam
- Advertisement -

தற்போது இந்தியாவில் கொரோனாவால் 56342 பேர் பாதிக்கப்பட்டும், 1886 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் ஊரடங்கு உத்தரவை பல மாநிலங்களில் இன்னும் சில நாட்களுக்கு நீட்டித்து உள்ளார்கள். தமிழகத்தில் 3550 பேர் பாதிக்கப்பட்டும், 31 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இதனால் தமிழக முதலமைச்சர் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உள்ளார். மேலும், மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்குகிறார்கள். இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியதற்கு காரணம் ஈஷா மையம் நடத்திய மகாசிவராத்திரி தான் என்று சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து கொண்டு வருகிறது.

-விளம்பரம்-

இதுகுறித்து நடிகர் சந்தானம் அவர்கள் ஈஷா மையம் குருவிடம் சமீபத்தில் பேட்டி எடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, வருடம் வருடம் நாடே இந்த மகாசிவராத்திரையை திருவிழா போன்று கொண்டாடுவார்கள். ஆனால், தற்போது இந்த மகா சிவராத்திரியினால் பிரச்சனை என்று சோசியல் மீடியாவில் வதந்தி கிளப்பி வருகிறார்கள். உண்மையை சொல்லவேண்டுமானால் மகா சிவராத்திரியினால் ஒன்னும் கொரோனா வரவில்லை.

- Advertisement -

ஒவ்வொரு மகா சிவராத்திரி வரும் போது யாராவது ஒருத்தர் போய் கோர்ட்டில் கேஸ் போடுவது, பத்திரிக்கையில் தவறாக எழுதுவது என்று பல்வேறு முயற்சிகளை செய்து இந்த மகா சிவராத்திரி நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நம்முடைய கலாச்சாரத்திற்கு சம்பந்தப்பட்டது, ஆன்மீகத்துக்கு சம்பந்தப்பட்டது, மனிதனின் நன்மைக்கு சம்பந்தப்பட்டது எல்லாம் நம் நாட்டில் நடக்க கூடாது என்று நினைக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் மகாசிவராத்திரி தொடங்கும்போது, முடியும் போதும் பல பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கிறது. அதோடு உலகத்திலேயே இந்த மாதிரி ஒரு பெரிய நிகழ்ச்சி எங்கேயுமே கிடையாது. தற்போது பல பேர் தென்னிந்தியாவில் கொரோனா வந்ததற்கு காரணமே மகாசிவராத்திரி என்று வதந்திகளை கிளப்பி வருகிறார்கள். மகா சிவராத்தி நடக்குறதுக்கு முன்னாடியே இந்தியா கவனமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லி இருந்தோம்.

-விளம்பரம்-

அதற்காகவே நாங்கள் வெளிநாடுகளில் இருந்து இங்கே வருபவர்களை 28 நாட்களுக்கு முன்னாடி வரவழைத்து அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனை இல்லை என்றால் மட்டும் தான் சிவராத்திரியில் கலந்து கொள்ள அனுமதித்தோம். இப்போது கூட ஆசிரமத்திற்கு வெளியே பல உதவிகளை தன்னார்வ தொண்டர்கள் செய்து வருகிறார்கள். எங்களுடைய நிகழ்ச்சியை எல்லாம் நாங்கள் நிறுத்தி விட்டோம்.

அரசாங்கம் லாக் டவுன் என்று சொல்லுவதற்கு முன்னாடியே நாங்கள் எங்களுடைய லாக் டவுனை ஆரம்பித்துவிட்டோம். எல்லா அரசாங்க துறையும் வந்து எங்கள் மையத்தை சோதனை செய்தார்கள். பின் அவர்களே எங்கள் மையத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இந்த பிரச்சனை எல்லாம் கூடிய விரைவில் மாறும் என்று நான் நம்புகிறேன். நாம் பொறுப்பாகவும், சரியான முறையில் நடந்தால் தான் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். பாதுகாப்பாக எல்லாரும் இருங்கள், பொறுப்பாக இருங்கள் என்று கூறினார்.

Advertisement