‘வீட்டுல சும்மா தான் இருக்கேன், இவர் படம்னா காமெடி வேடத்தில் நடிக்க தயார்’ – சந்தானத்தின் பேச்சு.

0
334
santhanam
- Advertisement -

நடிகர் சந்தானம் மீண்டும் படங்களில் காமெடி வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வின் டிவி எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-

பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்களிடையே பிரபலமானார். ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த சந்தானத்திற்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் நடிகர் சந்தானம், குணால் நடித்த ‘ பேசாத கண்ணும் பேசுமே’ என்ற படத்தில் சிறு காட்சியில் தோன்றியிருப்பார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் தான் காதல் அழிவதில்லை படத்தில் நடித்திருந்தார் சந்தானம்.

- Advertisement -

சந்தானத்தின் திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து இருந்தார். இவர் கடந்த சில வாருடங்களாக சினிமாவில் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். சில ஆண்டுகளாக சந்தானம் நடிப்பில் வெளியான சபாபதி, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத், டகால்டி போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் குலு குலு. இந்த படத்தை ரத்னகுமார் இயக்கி இருக்கிறார்.

சந்தானம் நடிக்கும் படம்:

இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் இவர்களுடன் இணைந்து பிரதீப், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை .தற்போது சந்தானம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

கேப்டன் படம்:

இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்த நிலையில் நடிகர் சந்தானம் மீண்டும் படங்களில் காமெடி வேடங்களில் நடிக்க இருக்கும் தகவல் வெளியாகிறது. அதாவது, ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கேப்டன். ஆக்சன் த்ரில்லர் ஜேனரில் உருவாகி உள்ள கேப்டன் படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் ராணுவ அதிகாரி கேரக்டரில் ஆர்யா நடித்துள்ளார்.

விழாவில் சந்தானம் சொன்னது:

இந்நிலையில் இந்த படத்தின் பிரீ ரிலீஸ் ஈவன்ட் சென்னையில் நேற்று நடந்தது. இதில் சந்தானம், ஆர்யா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது மேடையில் சந்தானம், ஆர்யா பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படம் நடிக்க தயார் என்றால் அந்த படத்தில் காமெடியனாக நடிக்க தயார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்யா எனக்கு போன் செய்திருந்தார். அப்போது என்ன செய்கிறாய் என்று கேட்டார்? வீட்டில் சும்மா தான் இருக்கேன் என்று நான் சொன்னேன். உடனே ஆர்யா, சரி இங்கேயும் வந்து சும்மா இருன்னு தான் என்னை அழைத்தார் என்று சந்தானம் கூறியிருக்கிறார்.

Advertisement