தேவையானி கருத்துக்கு பதிலடி கொடுத்து சந்தானம் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியானாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சந்தானம். சந்தானத்தைப் பொறுத்தவரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதன் பின் சந்தானத்தை வெள்ளி திரைக்கு அழைத்து வந்தவர் நடிகர் சிம்பு தான். தனது ‘மன்மதன்’ படத்தின் மூலம் சந்தானத்தை சினிமாவில் சிம்பு அறிமுகம் செய்து இருந்தார்.

அதுமட்டுமில்லாமல், சந்தானத்திற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பேசி சிம்பு வாங்கிக் கொடுத்தார். பின் சந்தானம் பிரபலமான காமெடி நடிகர் ஆனார். இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் சமீப காலமாக சந்தானம் ஹீரோவாக நடித்து வருகிறார். அதோடு தமிழ் சினிமாவில் காமெடியனாக கொடி கட்டி பறந்த சந்தானம் சில வருடமாக கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சந்தானம் குறித்த தகவல்:
மேலும், சமீபத்தில் சந்தானம் காமெடியனாக நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய படத்தில் சந்தானத்துடன் இணைந்து விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வசூலையும் செய்து இருந்தது. தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்க படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படத்தில் சந்தானம் அண்ட் கோவுடன் கௌதமேனன், செல்வராகவன் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=q7PBw-Pa4_Y
டிடி நெக்ஸ்ட் லெவல்:
இந்த படத்தை ஆர்யா தான் தயாரித்து இருக்கிறார். இந்த படம் வருகிற 16-ம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. தற்போது படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகை தேவையானிக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் சந்தானம் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேவையானி அளித்த பேட்டி:
அதாவது, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தேவயானி, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் என்னுடைய கணவர் நடித்திருப்பார். அப்போ அவரை காமெடி என்ற பெயரில் சந்தானம் மோசமாக கலாய்த்து இருப்பார். அது எனக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. அவர் அந்த படத்தில் நடித்து இருந்ததும் எனக்கு தெரியவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் தற்போது அளித்த பேட்டியில் சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்காக நாங்கள் ராஜ்குமார் சாரிடம் பேசினோம்.
https://www.youtube.com/watch?v=JQ3dggbuTt4
சந்தானம் கொடுத்த விளக்கம்:
அப்போது இது ஒரு பவர் ஸ்டார் மாதிரியான கதாபாத்திரம் தான் என்று ஏற்கனவே சொல்லிவிட்டோம். முதலில் நாங்கள் ஸ்கிரிப்ட், வசனம் எல்லாத்தையும் சொல்லிவிட்டு இதெல்லாம் உங்களுக்கு ஓகேவா என்று கேட்டுவிட்டு தான் நடிப்போம். காமெடி என்பது யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவரிடம் அனுமதி வாங்காமல், அவர் சம்மதிக்காமல் நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று கூறி இருக்கிறார்.






